
காளி தேவியை அவமதிக்கும் படத்தை ட்வீட் செய்ததற்கு மன்னிப்பு கேட்டது உக்ரைன் அரசாங்கம்
செய்தி முன்னோட்டம்
உக்ரைன் பாதுகாப்பு அமைச்சகம் காளி தேவியின் படத்தை ட்வீட் செய்ததற்கு , உக்ரைனின் துணை வெளியுறவுத்துறை அமைச்சர் எமின் ட்ஜபரோவா மன்னிப்பு கேட்டுள்ளார்.
பாதுகாப்பு அமைச்சகம் காளி தேவியை "சிதைக்கப்பட்ட முறையில்" சித்தரித்ததற்கு உக்ரைன் வருந்துகிறது என்றும், உக்ரைன் "தனித்துவமான இந்திய கலாச்சாரத்தை மதிக்கிறது, இந்தியாவின் ஆதரவை மிகவும் பாராட்டுகிறது" என்றும் எமின் ட்ஜபரோவா கூறியுள்ளார்.உக்ரைன் பாதுகாப்பு அமைச்சகம் சில நாட்களுக்கு முன் காளி தேவியின் படத்தை ட்வீட் செய்திருந்தது. இதற்கு இணையத்தில் பெரும் எதிர்ப்புகள் கிளம்பின.
இந்திய தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகத்தின் மூத்த ஆலோசகர் கஞ்சன் குப்தா, இந்த படத்தை "இந்து உணர்வுகள் மீதான தாக்குதல்" என்று கூறி இருந்தார்.
details
எமின் ட்ஜபரோவாவின் இந்திய பயணம்
இதற்கு மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் கஞ்சன் குப்தா கூறி இருந்தார்.
இணையத்தில் கிளம்பிய எதிர்ப்புகளுக்கு பிறகு உக்ரைன் பாதுகாப்பு அமைச்சகம் ட்விட்டரில் பதிவிட்டிருந்த காளி தேவியின் படத்தை நீக்கியது.
அந்த படத்தை பதிவிட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து, உக்ரைன் அரசாங்கத்தை பலரும் கடுமையாக சாடினர்.
இந்தியாவில் பரவலாக வழிபடப்படும் ஒரு தெய்வத்தை அவமதித்ததாக குற்றம்சாட்டப்பட்டது.
உக்ரைனின் துணை வெளியுறவுத்துறை அமைச்சர் எமின் ட்ஜபரோவா சமீபத்தில் அரசுமுறை பயணமாக இந்தியா வந்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
பிப்ரவரி 2022இல் ரஷ்யா-உக்ரைன் போர் தொடங்கியதற்கு பிறகு, இந்தியாவுக்கு வருகை தந்த முதல் உக்ரேனிய அதிகாரி இவர் ஆவார்.