NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil

    இந்தியா உலகம் வணிகம் விளையாட்டு தொழில்நுட்பம் பொழுதுபோக்கு ஆட்டோ வாழ்க்கை காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
     
    வீடு / செய்தி / உலகம் செய்தி / லடாக் பிரச்னையை சீக்கிரம் சரிசெய்ய இந்தியா-சீனா ஒப்புக்கொண்டது: பெய்ஜிங் 
    லடாக் பிரச்னையை சீக்கிரம் சரிசெய்ய இந்தியா-சீனா ஒப்புக்கொண்டது: பெய்ஜிங் 
    1/2
    உலகம் 1 நிமிட வாசிப்பு

    லடாக் பிரச்னையை சீக்கிரம் சரிசெய்ய இந்தியா-சீனா ஒப்புக்கொண்டது: பெய்ஜிங் 

    எழுதியவர் Sindhuja SM
    Apr 25, 2023
    02:25 pm
    லடாக் பிரச்னையை சீக்கிரம் சரிசெய்ய இந்தியா-சீனா ஒப்புக்கொண்டது: பெய்ஜிங் 
    சீன-இந்திய கார்ப்ஸ் கமாண்டர் நிலைக் கூட்டத்தின் 18வது சுற்று ஏப்ரல் 23 அன்று நடந்தது.

    எல்லைப் பகுதிகளில் அமைதியை நிலை நாட்டுவதுடன், கிழக்கு லடாக்கில் நீடித்து வரும் மோதல்களை சீக்கிரம் சரிசெய்ய இந்தியா மற்றும் சீனாவின் உயர் இராணுவ அதிகாரிகள் ஒப்புக்கொண்டதாக சீன பாதுகாப்பு அமைச்சகம் இன்று(ஏப் 25) தெரிவித்துள்ளது. சீன-இந்திய கார்ப்ஸ் கமாண்டர் நிலைக் கூட்டத்தின் 18வது சுற்று ஏப்ரல் 23 அன்று, சீனாவில் உள்ள சுஷுல்-மோல்டோ எல்லை சந்திப்புப் புள்ளியில் நடைபெற்றது. ஏப்ரல் 27 மற்றும் 28 ஆம் தேதிகளில் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின்(SCO) கூட்டத்தில் பங்கேற்பதற்காக சீன பாதுகாப்பு அமைச்சர் லீ ஷங்ஃபு இந்தியாவுக்கு வர இருப்பதை முன்னிட்டு இந்த பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது.

    2/2

    எல்லை பாதுகாப்பை உறுதி செய்ய நடத்தப்பட்ட பேச்சுவார்த்தை 

    "இரு நாடுகளும் தொடர்புடைய விஷயங்களில் நேர்மையான கருத்துக்களைப் பரிமாறிக் கொண்டன. இரு தரப்பு தலைவர்களின் வழிகாட்டுதலின் கீழ், இரு நாடுகளும் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கும், சீன-இந்திய எல்லைப் பகுதிகளில் அமைதியை தொடர்ந்து பாதுகாக்கவும் ஒப்புக்கொண்டன" என்று சீனாவின் மக்கள் விடுதலை இராணுவம்(PLA) தெரிவித்துள்ளது. இரு தரப்பினரும் தொடர்புடைய பிரச்சினைகளை சீக்கிரம் சரிசெய்வது குறித்து ஆழமான பேச்சு வார்த்தையை நடத்தினர், என்று சீன வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் மாவோ நிங் பெய்ஜிங்கில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்தார். "மேற்குத் துறையில் பாதுகாப்பையும் ஸ்திரத்தன்மையையும் பராமரிக்க இரு தரப்பினரும் ஒப்புக்கொண்டனர்," என்று இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் நேற்று தெரிவித்திருந்தது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    இந்தியா
    சீனா
    இந்திய ராணுவம்
    லடாக்

    இந்தியா

    WFI பாலியல் வன்கொடுமை வழக்கு: டெல்லி காவல்துறைக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் உச்ச நீதிமன்றம்
    Zero Shadow Day: பெங்களூரில் நடைபெறவிருக்கும் அதிசய நிகழ்வு  பெங்களூர்
    கேரளாவில் வந்தே பாரத் ரயிலை தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி  பாஜக
    இந்தியாவில் ஒரே நாளில் 6,934 கொரோனா பாதிப்பு: 24 பேர் உயிரிழப்பு கொரோனா

    சீனா

    BYD-யின் புதிய எலெக்ட்ரிக் ஹேட்ச்பேக் கார்.. என்னென்ன வசதிகள்?  புதிய வாகனம் அறிமுகம்
    ஆசிய விளையாட்டு போட்டியை தவிர்க்கும் இந்திய கிரிக்கெட் அணி : காரணம் என்ன? கிரிக்கெட்
    நிலவில் நிரந்தரக் கட்டுமானம்.. சீனாவின் திட்டம் என்ன?  உலகம்
    புதிய டேப்லட்களை அறிமுகப்படுத்தியிருக்கிறது ஷாவ்மி.. என்னென்ன வசதிகள்?  சியோமி

    இந்திய ராணுவம்

    கல்வான் பள்ளத்தாக்கில் கொல்லப்பட்ட வீரரின் மனைவி லெப்டினன்டாக இராணுவத்தில் நுழைய உள்ளார் இந்தியா
    பஞ்சாப் ராணுவ நிலைய துப்பாக்கி சூடு: இறந்தவர்களில் இருவர் தமிழகத்தை சேர்ந்தவர்கள்  இந்தியா
    தமிழக அரசை மிரட்டும் வகையில் பேசிய முன்னாள் ராணுவ கர்னல் மன்னிப்பு கோரியதால் முன்ஜாமீன் இந்தியா
    இந்திய-சீன எல்லை பகுதி ஆபத்தான நிலையில் இருக்கிறது: வெளியுறவுத்துறை அமைச்சர் இந்தியா

    லடாக்

    லடாக் கனமழை எதிரொலி - 450 ஆண்டுகால கட்டிடம் இடிந்து விழுந்தது  டெல்லி
    சீன கட்டுப்பாட்டு எல்லைக் கோட்டுக்கு அருகே அமைக்கப்படவிருக்கும் புதிய சாலையில் என்ன சிறப்பு? இந்தியா
    படங்கள்: லடாக்கில் 'பைக் ரைடு' செய்த ராகுல் காந்தி  ராகுல் காந்தி
    லடாக்கில் ராணுவ வாகனம் கவிழ்ந்து 9 வீரர்கள் உயிரிழப்பு இந்திய ராணுவம்
    அடுத்த செய்திக் கட்டுரை

    உலகம் செய்திகளை விரும்புகிறீர்களா?

    புதுப்பித்த நிலையில் இருக்க குழுசேரவும்.

    World Thumbnail
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2023