
எல் நினோ என்றால் என்ன; அது உலக வானிலையை எவ்வாறு பாதிக்கிறது
செய்தி முன்னோட்டம்
வரும் மாதங்களில் எல் நினோ எனப்படும் வானிலை நிகழ்வு உருவாக வாய்ப்பிருக்கிறது என்றும், இதனால் உலக வெப்பநிலை அதிகரிக்கும் என்றும் ஐக்கிய நாடுகளின் உலக வானிலை அமைப்பு(WMO) எச்சரித்துள்ளது.
எல் நினோ என்ற வானிலை மாற்றத்தால் உலகின் பல பகுதிகளில் காலநிலையின் முறைகள் பாதிக்கப்படுகிறது. இந்த வானிலை மாற்றம் உலகளாவிய வெப்பநிலையை அதிகரிக்க செய்கிறது என்கின்றனர் நிபுணர்கள்.
எல் நினோ என்றால் என்ன, அது உலக வானிலையை எவ்வாறு பாதிக்கிறது என்பதை பற்றி இப்போது பார்க்கலாம்.
எல் நினோ என்பது மத்திய மற்றும் கிழக்கு வெப்பமண்டல பசிபிக் பெருங்கடலின் கடல் மேற்பரப்பு வெப்பமடைவதைக் குறிக்கிறது, என்கிறது அமெரிக்காவின் புவியியல் ஆய்வு.
DETAILS
எல்-நினோவால் தெற்காசியாவில் கடுமையான வறட்சி ஏற்பட வாய்ப்பிருக்கிறது
எல்-நினோ வானிலை நிகழ்வு இரண்டு முதல் ஏழு ஆண்டுகளுக்கு ஒருமுறை ஏற்படுகிறது.
மேலும், இந்த நிகழ்வு பொதுவாக 9-12 மாதங்கள் வரை நீடிக்கும்.
இதில் சுவாரஸ்யமான விஷயம் என்னவென்றால் எல் நினோ நிகழ்வுகள் ஒரே மாதிரியாக இருக்காது. எந்த காலகட்டத்தில் இந்த நிகழ்வு ஏற்படுகிறது என்பதை பொறுத்து இதன் விளைவுகளும் மாறுபடும்.
எல் நினோ நிகழ்வுகளால் கீழுள்ளவைகள் அதிகம் பாதிக்கப்படுகிறது:
1.கடல்களின் வெப்பநிலை
2.கடல் நீரோட்டங்களின் வேகம் மற்றும் தீவிரம்
3.கடலோர மீன்பிடித்தல்
4.உலக வானிலை
பொதுவாக, எல் நினோ தென் அமெரிக்கா, மத்திய ஆசியா மற்றும் ஆப்பிரிக்கா போன்ற பகுதிகளில் அதிக மழைப்பொழிவை ஏற்படுத்துகிறது.
மேலும், இதனால் ஆஸ்திரேலியா, இந்தோனேசியா மற்றும் தெற்காசியாவின் சில பகுதிகளில் கடுமையான வறட்சி ஏற்பட வாய்ப்பிருக்கிறது.