
1 கிலோ கஞ்சா கடத்த முயற்சித்தவரை தூக்கிலிட்டது சிங்கப்பூர்
செய்தி முன்னோட்டம்
ஒரு கிலோ கஞ்சாவை கடத்த முயற்சித்ததற்காக ஒரு கைதியை சிங்கப்பூர் இன்று(ஏப் 26) தூக்கிலிட்டது.
மரண தண்டனையை ரத்து செய்யுமாறு பல சர்வதேச அமைப்புகள் கோரிக்கை விடுத்த போதிலும், அவை புறக்கணிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
தூக்கு தண்டனையை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று சிங்கப்பூருக்கான ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் அலுவலகம் வேண்டுகோள் விடுத்திருந்தது.
மேலும், பிரிட்டிஷ் அதிகாரி ரிச்சர்ட் பிரான்சன் மரண தண்டனையை நிறுத்துமாறு அழைப்பு விடுத்திருந்தார். ஆனால், இதெல்லாம் புறக்கணிப்பட்டு மரணதண்டனை நிறைவேற்றப்பட்டது.
"சிங்கப்பூரைச் சேர்ந்த தங்கராஜூ சுப்பையாவுக்கு(46) சாங்கி சிறை வளாகத்தில் இன்று மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது" என்று சிங்கப்பூர் சிறைச்சாலை சேவையின் செய்தித் தொடர்பாளர் கூறியுள்ளார்.
details
சிங்கப்பூர் ஒரு அப்பாவி மனிதனைக் கொல்லப் போகிறது: பிரான்சன்
1,017.9 கிராம் கஞ்சாவை கடத்த முயற்சித்ததற்காக 2017ஆம் ஆண்டில் சுப்பையாவுக்கு தண்டனை விதிக்கப்பட்டது.
1/2 கிலோ கஞ்சா கடத்தினாலேயே சிங்கப்பூரில் மரண தண்டனை வழங்கப்படும் என்ற நிலையில், ஒரு கிலோ கஞ்சா கடத்தியதாக அவர் மீது குற்றம்சாட்டப்பட்டிருந்தது.
ஜெனீவாவில் உள்ள மருந்துக் கொள்கைக்கான உலகளாவிய ஆணையத்தின் உறுப்பினர் பிரான்சன், திங்களன்று தனது வலைப்பதிவில், தங்கராஜூ கைது செய்யப்பட்ட நேரத்தில் போதைப்பொருள் அவரிடம் இல்லை என்றும் சிங்கப்பூர் ஒரு அப்பாவி மனிதனைக் கொல்லப் போகிறது என்றும் கூறி இருந்தார்.
இதற்கு பதிலளித்த சிங்கப்பூர் உள்துறை அமைச்சகம், தங்கராஜூவின் குற்றம் சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டுள்ளது என்று கூறியது.