சூடானில் இருந்து 1100 இந்தியர்கள் மீட்பு; 360 பேர் இந்தியா வந்தடைந்தனர்
செய்தி முன்னோட்டம்
'ஆபரேஷன் காவேரி'யின் கீழ், இந்தியா இதுவரை சூடானில் இருந்து கிட்டத்தட்ட 1100 பேரை வெளியேற்றியுள்ளது.
சூடான் இராணுவத்திற்கும் துணை ராணுவப் படைக்கும் இடையே நடந்த போர் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.
இந்த போர்நிறுத்தம் முடிவதற்குள், சண்டையால் பாதிக்கப்பட்ட சூடானிலிருந்து தனது குடிமக்களில் அதிகமானவர்களை மீட்கும் முயற்சியில் பல நாடுகள் ஈடுபட்டுள்ளன. அதில் இந்தியாவும் ஒரு நாடாகும்.
நான்காவது கட்ட நடவடிக்கையாக, இந்திய விமானப்படையின் C-130J இராணுவ போக்குவரத்து விமானம் இன்று மேலும் 128 இந்தியர்களை போர்ட் சூடானில் இருந்து ஜெட்டாவிற்கு கொண்டு வந்தது. எனவே, மொத்தமாக மீட்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1000த்தை தாண்டியுள்ளது.
details
360 பேர் கொண்ட முதல் குழு டெல்லி வந்தடைந்தது
"4வது IAF C-130J விமானம் போர்ட் சூடானில் இருந்து 128 பயணிகளுடன் ஜெட்டாவிற்கு புறப்பட்டது. ஆபரேஷன் காவேரியின் கீழ் சூடானில் இருந்து வெளியேற்றப்பட்ட இந்தியர்களின் ஆறாவது குழு இதுவாகும். மொத்தம் 1100 பேர் மீட்கப்பட்டுள்ளனர்." என்று வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் அரிந்தம் பாக்சி ட்வீட் செய்துள்ளார்.
முதல் கட்டத்தில், இந்தியா 278 குடிமக்களை வெளியேற்றியது. அதைத் தொடர்ந்து, இரண்டாவது கட்டத்தில் 121 பேரும், மூன்றாவது கட்டத்தில் 135 பேரும், நான்காவது கட்டத்தில் 136 பேரும், ஐந்தாவது கட்டத்தில் 297 பேரும் மற்றும் ஆறாவது கட்டத்தில் 128 பேரும் மீட்கப்பட்டனர்.
நேற்று இரவு 360 பேர் கொண்ட முதல் குழு ஒரு வணிக விமானத்தில் ஜெட்டாவிலிருந்து புது டெல்லிக்கு வந்தது.