Page Loader
புதின் இல்லத்தின் மீது தாக்குதல் நடத்திய உக்ரைன்: ரஷ்யா குற்றச்சாட்டு
இந்த சம்பவத்தின் போது புதினுக்கு எந்த காயம் ஏற்படவில்லை

புதின் இல்லத்தின் மீது தாக்குதல் நடத்திய உக்ரைன்: ரஷ்யா குற்றச்சாட்டு

எழுதியவர் Sindhuja SM
May 03, 2023
07:21 pm

செய்தி முன்னோட்டம்

அதிபர் விளாடிமிர் புதினைக் கொல்வதற்கு உக்ரைன் முயற்சித்ததாக ரஷ்யா குற்றம் சாட்டியுள்ளது. ரஷ்ய அதிபர் வீட்டின் மீது ஆளில்லா ட்ரோன் மூலம் உக்ரைன் தாக்குதல் நடத்தியதாக ரஷ்யா இன்று கூறியுள்ளது. "புதினுக்கு காயம் எதுவும் ஏற்படவில்லை. கிரெம்ளின் உள்ள கட்டிடங்களுக்கு எந்த சேதமும் இல்லை" என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவத்தை "திட்டமிட்ட பயங்கரவாத தாக்குதல்" என்று ரஷ்யா கருதுகிறது என்றும், இதற்கு தகுந்த பதிலடி கொடுக்கப்படும் என்றும் ரஷ்யா எச்சரித்துள்ளது. உக்ரைன் இந்த தாக்குதலுக்கு இரண்டு ட்ரோன்களைப் பயன்படுத்தியதாக கூறப்படுகிறது. அந்த இரண்டு ட்ரோன்களும் ரஷ்ய பாதுகாப்புப்படையினரால் தகர்க்கப்பட்டது. படுகொலை முயற்சியாக இது பார்க்கப்படுகிறது என்று உள்ளூர் செய்தி நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.

ட்விட்டர் அஞ்சல்

தாக்குதலின் போது பதிவுசெய்யப்பட்ட வீடியோ

ட்விட்டர் அஞ்சல்

தாக்குதலின் போது பதிவுசெய்யப்பட்ட வீடியோ