பிரிட்டன் அரச செங்கோலில் உள்ள உலகின் மிகப்பெரிய வைரம் - திருப்பித்தர தென்னாப்ரிக்கர்கள் கோரிக்கை
செய்தி முன்னோட்டம்
பிரிட்டன் அரச செங்கோலில் இருக்கும் உலகின் மிகப்பெரிய வைரமாக 530 காரட் எடைகொண்ட இந்த வைரமானது 1905ம் ஆண்டு தென்னாப்பிரிக்காவில் கண்டெடுக்கப்பட்டது.
2 ஆண்டுகளுக்கு பிறகு பிரிட்டன் ஆட்சியின் கீழ் இருந்த அந்நாட்டின் காலனித்துவ அரசாங்கத்தால் பிரிட்டானிய முடியாட்சிக்கு வழங்கப்பட்டது.
இது அதிகாரபூர்வமாக கல்லினன் I என்று அழைக்கப்படுகிறது.
இதில் இருந்து வெட்டப்பட்ட சிறு வைரம் கல்லினன் II என்று அழைக்கப்படுகிறது.
பிரிட்டனின் செங்கோலில் உள்ள இந்த வைரத்தின் 3,100 காரட் ஆகும்.
இது இம்பீரியல் ஸ்டேட் கிரீடத்தில் வைக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடவேண்டியவை ஆகும்.
வைரம்
சுமார் 8,000 கையொப்பங்களை கொண்ட ஆன்லைன் மனு
இந்த கிரீடம் பிரிட்டிஷ் மன்னர்கள் சடங்கு சந்தர்பங்களின் பொழுது அணிந்து கொள்வது வழக்கம்.
இது செங்கோல் மற்றும் மற்ற கிரீட நகைகளுடன் லண்டன் கோபுரத்தில் வைக்கப்பட்டுள்ளது என்று கூறப்படுகிறது.
இதனையடுத்து காலனித்துவ காலத்தில் கொள்ளையடிக்கப்பட்ட கலைப்படைப்புகள் மற்றும் கலைப்பொருட்கள் அனைத்தும் திரும்ப பெறுவது பற்றி உலகளாவிய உரையாடலின் பொழுது பேசப்பட்ட நிலையில், சில தென்னாப்பிரிக்கர்கள் வைரத்தினை திருப்பி தருமாறு கோரிக்கை வைத்துள்ளார்கள்.
இந்த வைரத்தினை திரும்பப்பெற சுமார் 8,000 கையொப்பங்களை கொண்ட ஆன்லைன் மனுவினை அவர்கள் அளித்துள்ளார்கள்.
இதற்கிடையே கேப் டவுன் டயமண்ட் மியூசியத்தில் ஒரு மனிதனின் முஷ்டி அளவுள்ள முழு கல்லினன் வைரத்தின் பிரதியும் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.