AI-யின் வளர்ச்சி.. சுருங்குகின்றனவா பெருநிறுவனங்கள்?
செய்தி முன்னோட்டம்
தற்போதைய நிலையில் டெக் நிறுவனங்கள் என அறியப்படும் கூகுள், அமேசான், பேஸ்புக் என எல்லாமே பெருநிறுவனங்கள் தான். ஒவ்வொரு நிறுவனத்திலும் 50,000-க்கும் மேற்பட்ட பணியாளர்கள் பணிபுரிவார்கள்.
பல்வேறு பணிநீக்க அறிவிப்புகளுக்குப் பிறகும் மெட்டாவில் 60,000 ஊழியர்கள் பணிபுரிந்து கொண்டிருக்கிறார்கள். ஆனால், இனி வரும் காலத்திலும் நிலைமை இதே போன்று இருக்குமா.
AI-க்களின் எழுச்சி நிறுவனங்கள் அளவைக் குறைக்குமா? திடீரென ஏன் இந்தக் கேள்வி எழுகிறது.
AI-யின் உதவியுடன் உருவப்படங்களை உருவாக்கும் மிட்ஜர்னி என்ற நிறுவனம் உலகம் முழுவதும் பலராலும் பரவலாக அறியப்படும் ஒரு நிறுவனம். ஆனால், அந்த நிறுவனத்தில் பணியாற்றும் ஊழியர்களின் எண்ணிக்கை வெறும் 11.
AI உலகைக் கலக்கிக் கொண்டிருக்கும் சாட்ஜிபிடி-யை உருவாக்கிய ஓபன்ஏஐ நிறுவனத்தில் வெறும் 375 ஊழியர்களே பணியாற்றுகிறார்கள்.
செயற்கை நுண்ணறிவு
சுருங்குமா நிறுவனங்கள்?
AI-யுடன் ஆட்டோமேஷனும் சேர்ந்தே வளர்கிறது. மனிதர்கள் செய்ய வேண்டிய செயலை AI-கள் செய்யமுடியாது. ஆனால், 10 ஊழியர்கள் பார்க்க வேண்டிய வேலையை 1 ஊழியர் பார்க்கும் வகையிலான வசதியை நிறுவனங்களுக்கு அவை வழங்கும்.
அதிக வேலைகளைச் செய்ய பல ஊழியர்களை பணியில் அமர்த்துவதற்குப் பதிலாக, ஆதீத திறனுடைய ஒரே ஒரு ஊழியரை பணியில் அமர்த்த நிறுவனங்கள் முன்வரும்.
குறைந்த ஊழியர்களே தேவைப்படும் ஒரு நிறுவனத்திற்கு பணத்தை செலவழிக்க வேண்டிய தேவையும் இருக்காது. எனவே, அவை பங்குச்சந்தையை நாடாமல் தாங்களே கூட முதலீடு செய்யலாம். இதன் மூலம் முதலீட்டு முறைகளே கூட மாறலாம்.
இவையெல்லாம் கண்டிப்பாக நடக்கும் எனக் கூற முடியாது. ஆனால், நடப்பதற்கான சாத்தியக்கூறை AI உருவாக்கிக் கொண்டிருக்கிறது.