காலிங் பெல்லை அடித்ததற்காக 3 சிறுவர்களை கொன்ற அமெரிக்க-இந்தியர்
அமெரிக்காவின் கலிபோர்னியாவைச் சேர்ந்த அமெரிக்க-இந்தியர் ஒருவர், ஜனவரி 2020இல், 13 வயதுடைய மூன்று சிறுவர்களைக் கொன்றதாக அவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. சிறுவர்கள் பயணித்த கார் மீது அனுராக் சந்திரா என்பவர் வேண்டுமென்றே மோதியதாகவும், இதனால் அந்த காரின் ஓட்டுநர் கட்டுப்பாட்டை இழந்து மரத்தில் மோதியதாகவும் நீதிமன்றம் கூறியுள்ளது. உயிரிழந்த சிறுவர்களான டேனியல் ஹாக்கின்ஸ், டிரேக் ரூயிஸ் மற்றும் ஜேக்கப் இவாஸ்கு ஆகியோர் செர்ஜியோ காம்புசானோ(18) என்பவருடன் காரில் பயணம் செய்து கொண்டிருந்தனர். அப்போது தான் இந்த விபத்து ஏற்பட்டது. அந்த மூன்று சிறுவர்களும் 13 வயதுடையவர்கள் ஆவர். அந்த சிறுவர்கள், சந்திராவின் வீட்டு காலிங் பெல்லை அடித்து குறும்புத்தனம் செய்திருக்கின்றனர். இதனால், கோபடைந்த அனுராக் சந்திரா அவர்களை பின் தொடர்ந்து சென்றிருக்கிறார்.
மூன்று கொலை வழக்குகளில் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டார்
சம்பவத்திற்கு முன்பு 12 பீர்களை குடித்ததாகவும், அவர்களின் குறும்புத்தனத்தால் கோபமடைந்ததாகவும் சந்திரா சாட்சியம் அளித்துள்ளார். இதைத் தொடர்ந்து, அவர்களைத் துரத்திச் சென்ற அனுராக் சந்திரா, அவர்களின் காரைப் பின்தொடர்ந்திருக்கிறார். மேலும், அவர்களின் கார் மீது மோதுவதற்கு முன், 159 கிமீ வேகத்தில் வாகனம் ஓட்டியதாக சந்திரா நீதிமன்றத்தில் ஒப்புக்கொண்டார். அதற்கு பின், கோபத்தில் அவர்களது காரில் மோதிய அவர், சிறுவர்களுக்கு காயம் ஏற்பட்டது தெரியாமல் அந்த இடத்தை விட்டு சென்றுவிட்டார். மூன்று கொலை மற்றும் மூன்று கொலை முயற்சி வழக்குகளில் அவரை நீதிமன்றம் குற்றவாளியாக அறிவித்துள்ளது.