அருணாச்சலில் உள்ள பகுதிகளின் பெயரை சீனாவால் மாற்ற முடியாது: பழமையான மடாலயம் அதிருப்தி
அருணாச்சல பிரதேசத்தில் உள்ள பல்வேறு இடங்களின் பெயரை சீனா மாற்றியதற்கு தவாங் மடாலயம் அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளது. "இங்குள்ள இடங்களை மறுபெயரிட அவர்களுக்கு எந்த உரிமையும் இல்லை. இதை நாங்கள் வன்மையாகக் கண்டிக்கிறோம்" என்று அந்த மடாலயத்தில் உள்ள துறவிகள் நியூஸ் 18 செய்தி நிறுவனத்திடம் தெரிவித்துள்ளனர். காடன் நம்கியால் லாட்சே என்றும் அழைக்கப்படும் தவாங் மடாலயம் ஆசியாவின் மிகப் பழமையான மடாலயமாகும். இந்த மடாலயத்தில் 300 புத்த துறவிகள் மற்றும் 17 கோம்பாக்கள் வசித்து வருகின்றனர். நியூஸ் 18இடம் பேசிய மடத்தின் லாமா துப்டன் சாஸ்திரி, "நாங்கள் ஏற்கனவே இதற்கு எதிராக பேரணிகளை நடத்தியுள்ளோம். சீனா எங்களை தொந்தரவு செய்ய முயற்சிக்கிறது. ஆனால் இதை நாங்கள் பொறுத்துக்கொள்ள மாட்டோம்." என்று கூறியுள்ளார்.
தவாங் மடாலயம் மகாயான பௌத்தத்திற்கு மிகவும் புனிதமான இடமாகும்
"திபெத்தில், சீனா பௌத்தர்களை சித்திரவதை செய்தது மற்றும் மதம், திபெத்திய கலாச்சாரம் மற்றும் வரலாற்றை அழிக்க முயன்றது; அனைத்தும் தாக்குதலுக்கு உள்ளானது. அவர்கள் நிறுவ முயற்சிக்கும் போலி கதைகளை கடுமையாக கண்டிக்கப்படும்," என்று அவர் மேலும் கூறினார். தவாங் மடாலயம் மகாயான பௌத்தத்திற்கு மிகவும் புனிதமான இடமாக கருதப்படுகிறது. ஐந்தாவது தலாய் லாமாவின் விருப்பத்தின் பேரில் 1680 ஆம் ஆண்டில் லோட்ரே கியாட்சோவால் இந்த மடாலயம் நிறுவப்பட்டது. 65க்கும் மேற்பட்ட குடியிருப்பு கட்டிடங்கள், 400+ கையால் எழுதப்பட்ட நூல் களஞ்சியசாலையுடன் கூடிய மூன்று மாடிக் கட்டமைப்பாக இந்த மடாலயம் அமைக்கப்பட்டுள்ளது.