எவரெஸ்ட் சிகரத்தில் மலையேறிய அமெரிக்கர் மரணம்! சீசனில் 4வது உயிரிழப்பு
எவரெஸ்ட் சிகரத்தில் ஏறிய அமெரிக்காவை சேர்ந்த 69 வயது நபர் உயிரிழந்துள்ளார். அமெரிக்காவை சேர்ந்த ஜொனாதன் சுகர்மேன்(69) என்பவர் நாள் எவரெஸ்ட் மலை சிகரத்தில் ஏறியுள்ளார். இவர், சுமார் 6,400 மீட்டர் உயரத்தில் வழக்கமான பயிற்சியில் ஈடுபட்டிருந்தபோது, திடீரென உடல் நலக் குறைவு ஏற்பட்டு உயிரிழந்துள்ளார். இவர் இரண்டாம் முகாமில் உயிரிழந்ததாக ஒருங்கிணைப்பாளர் கூறியுள்ளார். எனவே இறந்தவரின் உடலை மலை அடிவாரத்துக்கு கொண்டுவர முயற்சி மேற்கொண்டு வருகின்றனர். மேலும், உலகின் மிக உயரமான சிகரமான எவரெஸ்டில் சமீபத்தில் நிகழ்ந்த நான்காவது மரணம் இது என்பது குறிப்பிடத்தக்கது. இருப்பினும், இவரின் இறப்பினால் மற்ற குழுவினருக்கு எந்தவித அபாயமும் இல்லை எனவும் ஒருங்கிணைப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது.