
பிபிசி தலைவர் பதவியை ராஜினாமா செய்தார் ரிச்சர்ட் ஷார்ப்
செய்தி முன்னோட்டம்
இங்கிலாந்தை சேர்ந்த பிபிசி தலைவர் ரிச்சர்ட் ஷார்ப் தனது பதவியை இன்று(ஏப் 28) ராஜினாமா செய்தார்.
போரிஸ் ஜான்சனுக்கு ரகசிய கடன் வழங்கிய பிரச்சனையில், ரிச்சர்ட் ஷார்ப்புக்கு தொடர்பு இருப்பது விசாரணையில் தெரியவந்துள்ளது.
முன்னாள் பிரதமர் போரிஸ் ஜான்சனுக்கு வழங்கப்பட்ட £800,000 ரகசிய கடனுக்கும் தனக்கும் எந்த தொடர்பும் இல்லை என்பதை நிரூபிக்க ரிச்சர்ட் ஷார்ப் தவறிவிட்டார்.
எனவே, அவர் இன்று காலை தனது பதவியை ராஜினாமா செய்தார்.
ரகசிய கடன் வழங்கியது குறித்து அறிவிக்க தவிறியதால், ரிச்சர்ட் ஷார்ப் விதிகளை மீறியதாக பொது நியமன ஆணையர் தெரிவித்திருக்கிறார். ஆனால், இதை காரணமாக வைத்து அவரை பணிநீக்கம் செய்ய முடியாது என்றும் அவர் தெரிவித்திருந்தார்.
details
ஜான்சனுக்குக் கடனை வழங்கியது யார் என்பது இன்னும் தெரியவில்லை
எனினும், தானாகவே முன்வந்து ரிச்சர்ட் ஷார்ப் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.
இந்த பதவியில் இனி தன்னால் இருக்க முடியாது என்றும், வரும் ஜூன் மாதம் பதவி விலகுவேன் என்றும் அவர் அறிவித்துள்ளார்.
ஜான்சனுக்கு £800,000 தனிநபர் கடன் உத்தரவாதத்தை வழங்க ரிச்சர்ட் ஷார்ப் உதவி செய்தது, இந்த ஆண்டின் தொடக்கத்தில் தெரியவந்தது.
ஆனால், ஜான்சனுக்குக் கடனை வழங்கியது யார் என்பது இன்னும் தெரியவில்லை. அவர் பிரதமர் பதவியில் இருந்து வெளியேறிய பிறகுதான் இந்த சர்ச்சை வெளிச்சத்திற்கு வந்தது.