Page Loader
முடிசூட்டு விழாவில் பிரிட்டன் சார்லஸ் அணியும் விலையுர்ந்த தங்க ஆடைகள்!
முடிசூட்டு விழாவில் தங்க ஆடைகளை அணியும் பிரிட்டன் சார்லஸ்

முடிசூட்டு விழாவில் பிரிட்டன் சார்லஸ் அணியும் விலையுர்ந்த தங்க ஆடைகள்!

எழுதியவர் Siranjeevi
May 02, 2023
02:35 pm

செய்தி முன்னோட்டம்

பிரிட்டன் மன்னர் சார்லஸ் முடிசூட்டு விழாவில் அணியவிருக்கும் பாரம்பரியமிக்க தங்கலத்திலான ஆடைகள் தயார் செய்து வருகின்றனர். பிரிட்டன் நாட்டில் நீண்ட காலமாக தலைமை பதவியில் இருந்த ராணி எலிசபெத் மறைவுக்கு பின் அவரது மகன் சார்லஸ் மன்னர் பதவிக்கு வந்தார். இருந்தாலும் அவருக்கு முடிசூட்டும் விழா இன்னும் நடைப்பெறவில்லை. இதனிடையே மே 6 ஆம் தேதி கோலாகலமாக அவருக்கு முடிசூட்டு விழா நடைப்பெற உள்ளதாக அனைத்தும் தயார் செய்து வருகின்றனர். லண்டன் வெஸ்ட்மின்ஸ்டர் அபேயில் முடிசூட்டு விழா நடைப்பெறுகிறது. இந்த விழாவில் மன்னர் சார்லஸ் இரண்டு வரலாற்று சிறப்பு மிக்க ஆடைகளை அணிய உள்ளார். இந்த ஆடைகளை 70 ஆண்டுக்கு முன் எலிசபெத் அணிந்த நிலையில் மன்னர் சார்லஸுக்கும் பயன்படுத்த உள்ளனர்.

ட்விட்டர் அஞ்சல்

Twitter Post