Page Loader
அமெரிக்காவிற்கு செல்லும் இந்திய மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது 
அமெரிக்காவில் உள்ள நான்கு பிராந்தியங்களும் 2021 முதல் 2022 வரை சர்வதேச மாணவர் எண்ணிக்கையில் அதிகரிப்பைக் கண்டுள்ளன.

அமெரிக்காவிற்கு செல்லும் இந்திய மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது 

எழுதியவர் Sindhuja SM
May 02, 2023
01:11 pm

செய்தி முன்னோட்டம்

2021ஆம் ஆண்டுடன் ஒப்பிடும் போது, 2022 ஆம் ஆண்டில், இந்தியா அதிக மாணவர்களை அமெரிக்காவிற்கு அனுப்பியுள்ளது, அதே நேரத்தில் சீனா குறைவான மாணவர்களையே அனுப்பியுள்ளது என்ற புதிய தகவல் வெளியாகி உள்ளது. அமெரிக்க குடிவரவு மற்றும் சுங்க அமலாக்கத்துறை ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையில் இது குறித்த தகவல்கள் வெளியாகி உள்ளன. "சீனா மற்றும் இந்தியாவைச் சேர்ந்த மாணவர்களின் எண்ணிக்கை ஆசியாவை மிகவும் பிரபலமான கண்டமாக மாற்றியுள்ளது. 2021ஆம் ஆண்டுடன் ஒப்பிடும் போது, 2022இல் சீனா குறைவான மாணவர்களையே(-24,796) அமெரிக்காவிற்கு அனுப்பியுள்ளது, அதே நேரத்தில் இந்தியா அதிக மாணவர்களை(64,300) அமெரிக்காவிற்கு அனுப்பியுள்ளது." என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டிருக்கிறது.

details

8 முதல் 11 சதவீதம் வரை மாணவர் சேர்க்கை அதிகரித்துள்ளது 

மழலையர் பள்ளி முதல் 12ஆம் வகுப்பு வரை சேர்ந்த சர்வதேச மாணவர்களின் எண்ணிக்கை 2021 முதல் 2022 வரை 7.8 சதவீதம் அதிகரித்துள்ளது(3,887). 2021 காலண்டர் ஆண்டைப் போலவே, 2022 காலண்டர் ஆண்டிலும் 700க்கும் மேற்பட்ட சர்வதேச மாணவர்களை எந்த K-12 பள்ளிகளும் ஏற்றுக்கொள்ளவில்லை என்று இந்த அறிக்கை கூறுகிறது. அமெரிக்காவில் உள்ள நான்கு பிராந்தியங்களும் 2021 முதல் 2022 வரை சர்வதேச மாணவர் எண்ணிக்கையில் அதிகரிப்பைக் கண்டுள்ளன. அந்த அதிகரிப்பு 8 முதல் 11 சதவீதம் வரை இருக்கும் என்று இந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.