பூமிக்கு நெருங்கும் ஆபத்து: மெகா சைஸ் விண்கல் 62 ,723 கீ.மி வேகத்தில் வந்துகொண்டிருக்கிறது
இன்றும், நாளையும், நான்கு விண்கற்கள் பூமிக்கு மிக அருகில் செல்லும் என்றும், அவற்றில் இரண்டு மிகப் பெரியவை, கிட்டத்தட்ட ஒரு விமானத்தை ஒத்திருக்கும் என்றும் நாசா அறிவித்துள்ளது. அந்த மெகா சைஸ் விண்கற்களுக்கு, 2023 HW2 மற்றும் 2023 HL2 என்ற குறியீட்டுப் பெயர் சூட்டப்பட்டுள்ளது. அவை முறையே 90 அடி மற்றும் 88 அடி நீளம் கொண்டவை எனவும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. பூமி மீது விண்கற்களின் தாக்கங்களைச் சமாளிப்பதற்காக, நாசா ஏற்கனவே, DART எனும் முறையை கடைபிடிக்க உள்ளது. அதாவது, ஒரு விண்கலத்தை, எதிர் வரும் விண்கல் மீது மோதி, அதன் பாதையில் இருந்து திசை திருப்பும் யுக்தி.