Page Loader
மார்ஷியல் ஆர்ட்ஸ் விளையாட்டு போட்டியில் கலந்து கொண்டு பதக்கம் வென்றிருக்கிறார் மார்க் ஸூக்கர்பெர்க்!
மார்ஷியல் ஆர்ட்ஸ் போட்டியில் பதக்கம் வென்றார் மார்க் ஸூக்கர்பெர்க்

மார்ஷியல் ஆர்ட்ஸ் விளையாட்டு போட்டியில் கலந்து கொண்டு பதக்கம் வென்றிருக்கிறார் மார்க் ஸூக்கர்பெர்க்!

எழுதியவர் Prasanna Venkatesh
May 09, 2023
11:21 am

செய்தி முன்னோட்டம்

ஃபேஸ்புக்கின் நிறுவனரான மார்க் ஸூக்கர்பெர்க் ஜியு-ஜிட்ஸூ மார்ஷியல் ஆர்ட்ஸ் போட்டியில் கலந்து கொண்டு வெற்றி பெற்றுள்ளதாக தன்னுடைய சமூக வலைத்தளப்பக்கங்களில் பதிவிட்டிருக்கிறார். அந்தப் பதிவில், "என்னுடைய முதல் ஜியு-ஜிட்ஸூ போட்டியில் கலந்துகொண்டு கரில்லா ஜியு-ஜிட்ஸூ அணியின் சார்பாக சில பதக்கங்களை வென்றேன்" எனக் குறிப்பிட்டிருக்கிறார் மார்க். பிரேசிலியின்-ஸ்டைல் ஜியு-ஜிட்ஸூ சண்டை முறையானது அடி-உதை ஆகியவற்றை உள்ளடக்கியதாக இல்லாமல், இறுகப்பிடிப்பதன் மூலம் எதிரியை நம் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரும் விளையாட்டு முறையாகும். இந்த முறை விளையாட்டையே கொரோனா காலத்தின் போது தான் கற்றுக் கொண்டதாக நேர்காணல் ஒன்றில் முன்னர் தெரிவித்திருந்தார் மார்க். இந்த விளையாட்டு தன்னை புத்துணர்ச்சியாக வைத்துக் கொள்ள உதவியதாகவும், வேலையிலும் இதனால் தன்னால் சிறப்பாக செயல்பட முடிந்ததாகவும் அவர் தெரிவித்திருக்கிறார்.

Instagram அஞ்சல்

Instagram Post