Page Loader
இங்கிலாந்து இளவரசர் வில்லியம்-கேட் மிடில்டோ குடும்பத்தில் அடிக்கடி நடக்கும் சண்டைகள்
இளவரசர் வில்லியமும் அவரது மனைவி கேட் மிடில்டனும் அதிகமாக சண்டை போட்டு கொள்வார்களாம்.

இங்கிலாந்து இளவரசர் வில்லியம்-கேட் மிடில்டோ குடும்பத்தில் அடிக்கடி நடக்கும் சண்டைகள்

எழுதியவர் Sindhuja SM
Mar 15, 2023
04:48 pm

செய்தி முன்னோட்டம்

கேட் மிடில்டன் மற்றும் இளவரசர் வில்லியம் திருமணம் பற்றிய சுவாரஸ்யமான விவரங்களை ஒரு அரச எழுத்தாளர் வெளியிட்டிருக்கிறார். இளவரசர் வில்லியமும் அவரது மனைவி கேட் மிடில்டனும் அதிகமாக சண்டை போட்டு கொள்வார்களாம். அவர்களது சண்டையின் போது ஒருவர் மீது ஒருவர் பொருட்களை எடுத்து வீசுவது மிகவும் சாதாரணமான விஷயம் என்று அந்த அரச எழுத்தாளர் கூறியுள்ளார். ஃபாக்ஸ் நியூஸ் டிஜிட்டலுக்கு அளித்த பேட்டியின் போது, ​​"கில்டட் யூத்: ஆன் இன்டிமேட் ஹிஸ்டரி ஆஃப் க்ரோயிங் அப் இன் தி ராயல் ஃபேமிலி" என்ற நூலின் ஆசிரியரான டாம் க்வின் இந்த தகவலை வெளியிட்டிருக்கிறார்.

இங்கிலாந்து

அவர்கள் வாழ்க்கை ஜேன் ஆஸ்டன் நாவல் போன்றது

"கேட் மிகவும் அமைதியான நபராகத் தோன்றலாம், ஏன் வில்லியமும் கூட. ஆனால் அது உண்மையல்ல. வில்லியம் மற்றும் கேட் ஆகியோருக்கு இருக்கும் பெரிய கஷ்டம் என்னவென்றால், அவர்கள் எப்போதும் அரண்மனை உதவியாளர்களால் சூழப்பட்டுள்ளனர் என்பது தான். அவர்கள் வாழ்க்கை ஜேன் ஆஸ்டன் நாவல் போன்றது." என்று டாம் க்வின் கூறியுள்ளார். "நிச்சயமாக, தனிப்பட்ட முறையில், வில்லியம் மற்றும் கேட், எல்லா ஜோடிகளையும் போலவே, நிறைய சண்டை போடுவார்கள். சண்டையின் போது அவர்கள் ஒருவருக்கொருவர் அன்பற்ற விஷயங்களை கூறிக் கொள்வார்கள். ஆனால் கேட் சீக்கிரமே சமாதானம் அடைந்துவிடுவார். குழந்தைப் பருவத்தில் விவாகரத்து போன்ற பல இடையூறுகளை சந்தித்ததால் வில்லியமும் விட்டு கொடுத்துவிடுவார்." என்று அவர் மேலும் கூறியுள்ளார்.