Page Loader
சோஹோ ஸ்ரீதர் வேம்பு மீது மனைவி குற்றச்சாட்டு
உலகின் முன்னணி ஐடி நிறுவனங்களுள் ஒன்றான சோஹோ ஸ்ரீதர் வேம்பு மீது மனைவி குற்றச்சாட்டு

சோஹோ ஸ்ரீதர் வேம்பு மீது மனைவி குற்றச்சாட்டு

எழுதியவர் Nivetha P
Mar 14, 2023
11:39 am

செய்தி முன்னோட்டம்

உலகின் முன்னணி ஐடி நிறுவனங்களுள் ஒன்றான சோஹோ நிறுவனத்தின் சி.இ.ஓ. ஸ்ரீதர் வேம்பு மீது அவரது மனைவி சில குற்றச்சாட்டுகளைக்கூறி பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளார். கலிபோர்னியாவில் வசித்துவரும் ஸ்ரீதர் வேம்பு கடந்த 2022ம்ஆண்டு தன்னையும், தனது ஆட்டிசம் குறைபாடுள்ள மகனையும் நிர்கதியாக விட்டுச் சென்றுவிட்டார் என்று அவரது மனைவி பிரமிளா தெரிவித்துள்ளார். மேலும் அவருடன் கலிபோர்னியாவில் வசித்துவந்த பொழுதே, சோஹோ நிறுவனத்தில் தனது பெயரில் இருந்த பங்குகளை தனக்கே தெரியாமல் அவரது சகோதரி மற்றும் சகோதரியின் கணவர் பெயரில் மாற்றிவிட்டார் என்றும் அவர் கூறியுள்ளார். இந்த குற்றச்சாட்டுக்கு ஸ்ரீதர் மறுப்பு தெரிவித்துள்ளதோடு, பொருளாதார ரீதியாக அவர்களுக்கு உதவாமல் இல்லை என்று கூறியுள்ளார். மேலும் இவர் தற்போது தமிழகத்திலுள்ள மதளம்பாறை கிராமத்தில் வசித்துவருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

ட்விட்டர் அஞ்சல்

சோஹோ ஸ்ரீதர் வேம்பு மீது அவரது மனைவி குற்றச்சாட்டு