ரஷ்யாவுக்கு பயணம் செய்ய இருக்கும் ஜி ஜின்பிங்
செய்தி முன்னோட்டம்
சீன அதிபர் ஜி ஜின்பிங் அடுத்த வாரம் ரஷ்யாவுக்குச் சென்று அந்நாட்டு அதிபர் விளாடிமிர் புதினுடன் இருதரப்பு பேச்சுவார்த்தை நடத்துவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த பயணத்தின் போது, பிப்ரவரி 2022 முதல் நடந்து வரும் உக்ரைனுடனான ரஷ்ய போரை பற்றி அவர் விவாதிப்பார் என்று கூறப்படுகிறது.
ஆனால், ஜி ஜின்பிங் ரஷ்யாவுக்கு ராணுவ உதவி வழங்க திட்டமிட்டிருக்கலாம் என்று மேற்கத்திய நாடுகள் சந்தேகிக்கின்றன.
ரஷ்யாவுக்கு வருமாறு ஜி ஜின்பிங்குக்கு புதின் அழைப்பு விடுத்ததாக ஜனவரி 30 அன்று ரஷ்யாவின் Tass செய்தி நிறுவனம் தெரிவித்திருந்தது.
ரஷ்யா
ரஷ்ய-உக்ரைன் போர் பற்றி பேச்சு வார்த்தை நடத்தப்படுமா?
ஜி ஜின்பிங், ஏப்ரல் மாத தொடக்கத்தில் அல்லது மார்ச் மாத இறுதியில் ரஷ்யாவுக்கு செல்வார் என்று வால் ஸ்ட்ரீட் ஜேர்னல் கடந்த மாதம் தெரிவித்திருந்தது.
இது பற்றி கருத்து கூற சீனா மற்றும் ரஷ்யாவின் வெளியுறவுத்துறை அமைச்சர்கள் மறுத்துவிட்டனர்.
இது குறித்த வேறு எந்த தகவலும் வெளியிடப்படவில்லை.
கடந்த மாதம், மாஸ்கோவிற்கு பயணம் செய்த சீனாவின் உயர்மட்ட அதிகாரியான வாங் யீயை புதின் வரவேற்று விருந்தளித்தார்.
இதனால், ஜி ஜின்பிங் ரஷ்யாவுக்கு விரைவிலேயே செல்வார் என்ற செய்திகள் வெளியாகின.
ஜி ஜின்பிங் அடுத்த வாரம் ரஷ்யாவுக்கு பயணம் செய்தால், ரஷ்ய-உக்ரைன் போர் தொடங்கிய பிறகு ஜி ஜின்பிங் ரஷ்யாவுக்கு செல்வது இதுவே முதல்முறையாக இருக்கும்.