Page Loader
இந்தியாவுக்கான புதிய அமெரிக்க தூதர்: யாரிந்த எரிக் கார்செட்டி
கார்செட்டி, தனது 42 வயதில், லாஸ் ஏஞ்சல்ஸின் முதல் யூத மேயராக 2013இல் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

இந்தியாவுக்கான புதிய அமெரிக்க தூதர்: யாரிந்த எரிக் கார்செட்டி

எழுதியவர் Sindhuja SM
Mar 16, 2023
01:09 pm

செய்தி முன்னோட்டம்

இந்தியாவுக்கான அமெரிக்க தூதராக எரிக் கார்செட்டியை தேர்ந்தெடுக்க அமெரிக்க செனட் நேற்று(மார் 15) வாக்கெடுப்பை நடத்தியது. இதில் அமெரிக்க செனட் உறுப்பினர்கள் 52-42 என்ற விகிதத்தில் வாக்களித்துள்ளனர். எரிக் கார்செட்டி, லாஸ் ஏஞ்சல்ஸ் நகரின் மேயராக இருந்தபோது, அவரது ஊழியர் ஒருவருக்கு எதிராக பாலியல் வன்கொடுமை செய்ததாக அவர் மீது எழுந்த குற்றச்சாட்டுகளுக்கு இடையில் இந்த வாக்கெடுப்பு நடந்திருக்கிறது. இதற்கு முன், இந்தியாவிற்கான அமெரிக்க தூதராக இருந்த கென்னத் ஜஸ்டர், அமெரிக்காவின் ஆட்சி மாற்றத்திற்குப் பிறகு ஜனவரி 2021 இல் பதவி விலகினார். ஜஸ்டரின் நியமனத்திற்கு முன்னர், இந்தியாவின் அமெரிக்க தூதரகம் எலிசபெத் ஜோன்ஸின் தலைமையில் இருந்தது. கார்செட்டி, தனது 42 வயதில், லாஸ் ஏஞ்சல்ஸின் முதல் யூத மேயராக 2013இல் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

அமெரிக்கா

எரிக் கார்செட்டியின் பட்ட படிப்புகள்

இவர் அரசியல் மற்றும் நகர்ப்புற திட்டமிடலில் பிஏ பட்டமும் சர்வதேச விவகாரங்களில் எம்.ஏ பட்டமும் பெற்றுள்ளார். இவர் தனது படிப்பை கொலம்பியா பல்கலைக்கழகத்தில் முடித்திருக்கிறார். ஆக்ஸ்போர்டில் உள்ள குயின்ஸ் கல்லூரியில் ரோட்ஸ் ஸ்காலராக இருந்த இவர், லண்டன் ஸ்கூல் ஆஃப் எகனாமிக்ஸில்(LSE) இனம் மற்றும் தேசியவாதத்தில் பிஎச்.டி.யையும் தொடங்கினார். ஆனால் இன்னும் இந்த பட்டப்படிப்பை முடித்ததாக தெரியவில்லை. கார்செட்டியின் நியமனம் ஜூலை 2021 முதல் அமெரிக்க காங்கிரஸில் நிலுவையில் உள்ளது. இவர் அதிபர் ஜோ பைடனால் மதிப்புமிக்க இந்த இராஜதந்திர பதவிக்கு பரிந்துரைக்கப்பட்டார். கடந்த வாரம், செனட் வெளியுறவுக் குழு, அதன் வணிகக் கூட்டத்தில், கார்செட்டியின் நியமனத்திற்கு ஆதரவாக 13-8 என்ற விகிதத்தில் வாக்களித்தது.