சீனாவில் பெய்த 'புழுக்கள்' மழை: வைரலாகும் வீடியோ
சீனாவின் பெய்ஜிங்கில் புழு மழை பெய்ததாக ஒரு வீடியோ சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது. தலைநகர் பெய்ஜிங்கில் எடுக்கப்பட்ட வீடியோவில், சாலைகள் மற்றும் வாகனங்கள் புழுக்களால் மூடப்பட்டிருப்பது தெரிகிறது என்று நியூயார்க் போஸ்ட்டின் ஒரு செய்தி கூறுகிறது. பெய்ஜிங்கில் உள்ள கார்கள் புழு போன்ற உயிரினங்களால் மூடப்பட்டிருப்பதை வீடியோவில் காணலாம். "புழு மழைக்கான காரணம் இன்னும் அறியப்படவில்லை. ஆனால், மதர் நேச்சர் நெட்வொர்க் என்ற அறிவியல் இதழ், மெலிதான உயிரினங்கள் பலத்த காற்றினால் அடித்துச் செல்லப்படுவதனால் இப்படி நடக்கலாம் என்று கூறுகிறது" என்று நியூயார்க் போஸ்ட் தெரிவித்துள்ளது. இதற்கிடையில், பெய்ஜிங்கை சேர்ந்த ஒரு பத்திரிகையாளர் இது பொய்யான செய்தி என்றும் பெய்ஜிங்கில் பல நாட்களாக மழையே பெய்யவில்லை என்றும் கூறியுள்ளார்.