NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    NewsBytes Tamil
    English Hindi Telugu
    NewsBytes Tamil

    இந்தியா உலகம் விளையாட்டு தொழில்நுட்பம் பொழுதுபோக்கு ஆட்டோ வாழ்க்கை காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
     
    வீடு / செய்தி / உலகம் செய்தி / அமெரிக்க ஆளில்லா விமானத்துடன் நேருக்கு நேர் மோதிய ரஷ்ய ஜெட் விமானம்
    உலகம்

    அமெரிக்க ஆளில்லா விமானத்துடன் நேருக்கு நேர் மோதிய ரஷ்ய ஜெட் விமானம்

    அமெரிக்க ஆளில்லா விமானத்துடன் நேருக்கு நேர் மோதிய ரஷ்ய ஜெட் விமானம்
    எழுதியவர் Sindhuja SM
    Mar 15, 2023, 11:10 am 1 நிமிட வாசிப்பு
    அமெரிக்க ஆளில்லா விமானத்துடன் நேருக்கு நேர் மோதிய ரஷ்ய ஜெட் விமானம்
    உக்ரைன் போர் தொடர்பாக ரஷ்யாவிற்கும் அமெரிக்காவிற்கும் இடையே நேரடி மோதல் ஏற்படும் அபாயத்தை இந்த சம்பவம் எடுத்துக்காட்டுகிறது.

    அமெரிக்க ஆளில்லா விமானத்துடன் ரஷ்ய போர் விமானம் மோதியதால், ஆளில்லா அமெரிக்க விமானம் கடலில் விழுந்து நொறுங்கியதாக அமெரிக்க ராணுவம் தெரிவித்துள்ளது. உக்ரைன் போர் தொடர்பாக ரஷ்யாவிற்கும் அமெரிக்காவிற்கும் இடையே நேரடி மோதல் ஏற்படும் அபாயத்தை இந்த சம்பவம் எடுத்துக்காட்டுகிறது. அமெரிக்க ட்ரோன் சர்வதேச வான்வெளியில் வழக்கமான பணியில் ஈடுபட்டிருந்தபோது, ​​இரண்டு ரஷ்ய ஜெட் விமானங்கள் அதை இடைமறிக்க முயன்றதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது. இதை மறுத்த ரஷ்யா, ட்ரோன் பணியில் ஈடுபட்டிருந்தபோது விபத்துக்குள்ளானதாக கூறி இருக்கிறது. MQ-9 ரீப்பர் என்ற ட்ரோன், அதன் டிரான்ஸ்பாண்டர்கள் அணைந்த நிலையில் பறந்து கொண்டிருந்ததாகவும் ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது. டிரான்ஸ்பாண்டர்கள் என்பது விமானத்தை கண்காணிக்க உதவும் தகவல் தொடர்பு சாதனமாகும்.

    ரஷ்ய தூதர் அனடோலி அன்டோனோவுடன் பேச்சு வார்த்தை

    ரீப்பர் ட்ரோன்கள், 20 மீ(66 அடி) நீள இறக்கைகள் கொண்ட கண்காணிப்பு விமானங்களாகும். இந்த சம்பவம், செவ்வாய்கிழமை மத்திய ஐரோப்பிய நேரப்படி (06:03 GMT) சுமார் 07:03 மணிக்கு நடந்ததாக அமெரிக்க ராணுவம் தெரிவித்துள்ளது. "MQ-9 விமானம், சர்வதேச வான்வெளியில் வழக்கமான பணிகளை செய்துகொண்டிருந்தபோது, ​​அது ரஷ்ய விமானத்தால் இடைமறித்து தாக்கப்பட்டது. இதன் விளைவாக MQ-9 விபத்துக்குள்ளானது." என்று அமெரிக்கா ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளது. இந்த சம்பவத்திற்கு எதிராக நடவடிக்கை எடுத்த அமெரிக்கா, வாஷிங்டனில் உள்ள ரஷ்ய தூதர் அனடோலி அன்டோனோவை வரவழைத்து பேச்சுவார்த்தை நடத்தியது.

    இந்த காலவரிசையைப் பகிரவும்
    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    உலகம்
    அமெரிக்கா
    ரஷ்யா

    உலகம்

    உலக நுகர்வோர் உரிமைகள் தினம் 2023: நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய சில தகவல்கள் வணிக செய்தி
    இம்ரான் கான் கைது செய்யப்படுவதை எதிர்த்து பெரும் போராட்டத்தில் இறங்கிய ஆதரவாளர்கள் பாகிஸ்தான்
    இந்திய ஆன்லைன் படிப்பில் கலந்து கொள்ள இருக்கும் தாலிபான் உறுப்பினர்கள் ஆப்கானிஸ்தான்
    உலக ஒழுங்குக்கு சீனா சவாலாக உள்ளது: ரிஷி சுனக் சீனா

    அமெரிக்கா

    அமெரிக்காவில் அடுத்த வங்கியும் மூடல் - ஜோ பைடன் கொடுத்த உத்தரவாதம் வங்கிக் கணக்கு
    வைரல் வீடியோ: அமெரிக்காவில் இருக்கும் அம்மா உணவகம் ஜெயலலிதா
    அமெரிக்காவில் சிலிக்கான் வேலி வங்கி திவால்! அதிர்ச்சியில் மக்கள் வங்கிக் கணக்கு
    பாகிஸ்தான் மீண்டும் சீண்டினால் இந்தியா ராணுவ நடவடிக்கை எடுக்கும்: அமெரிக்கா இந்தியா

    ரஷ்யா

    ரஷ்யாவுக்கு பயணம் செய்ய இருக்கும் ஜி ஜின்பிங் உலகம்
    ஸ்புட்னிக் V தடுப்பூசியை கண்டுபிடித்த ரஷ்ய விஞ்ஞானி கழுத்தை நெரித்து கொலை உலகம்
    உக்ரைன் மீது தற்கொலை படை தாக்குதல் நடத்த திட்டமிடுகிறதா ரஷ்யா உக்ரைன்
    உக்ரைன் பிரச்சனையை பேச்சுவார்த்தை மூலம் தீர்க்க முடியும்: பிரதமர் மோடி இந்தியா

    உலகம் செய்திகளை விரும்புகிறீர்களா?

    புதுப்பித்த நிலையில் இருக்க குழுசேரவும்.

    World Thumbnail
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2023