
நியூயார்க்: எலிகளை விரட்டுவதற்கு 1 கோடி ரூபாய் சம்பளம்
செய்தி முன்னோட்டம்
நியூயார்க் நகரத்தில்(NYC) அதிகரித்து வரும் எலிகளின் எண்ணிக்கையை சமாளிக்க, ஒரு அதிகாரியை நிர்வாகம் நியமித்துள்ளது.
இந்த அதிகாரி ஒரு வருடத்திற்கு 155,000 அமெரிக்க டாலர்களை சம்பளமாக பெறுவார்.
155,000 டாலர்கள் என்பது இந்திய ரூபாயின் மதிப்பில் சுமார் 1.26 கோடியாகும்(ரூ.1,26,80,550).
முன்னாள் பள்ளி ஆசிரியையான கேத்லீன் கொராடி எலிகளை சமாளிப்பதற்கான முதல் இயக்குநராக நியமிக்கப்பட்டுள்ளார்.
நியூயார்க்கின் மேயர் எரிக் ஆடம்ஸ் இவரை 'ரேட் சார்' என்ற பதவியில் நியமித்தார்.
எட்டு மில்லியனுக்கும் அதிகமான எலிகள் நியூயார்க் நகரத்தில் இருப்பதாகவும் இதனால் அதிகமான சுகாதார பிரச்சனைகள் ஏற்படுவதாகவும் CNN செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
DETAILS
நியூயார்க் நகரத்திற்கு பெரும் சவாலாக இருக்கும் எலிகள்
ஆனால் 2014 ஆம் ஆண்டு புள்ளியியல் நிபுணர் ஜோனாதன் அவுர்பாக் தலைமையில் நடத்தப்பட்ட ஆய்வு, சுமார் 2 மில்லியன் எலிகள் மட்டுமே இருப்பதாக மதிப்பிட்டிருந்தது.
சுகாதாரம், மனநல சுகாதாரம், பூங்காக்கள் மற்றும் பொழுதுபோக்கு போன்ற நகர ஏஜென்சிகளை ஒருங்கிணைக்கும் ஒருங்கிணைப்பாளராக கொராடி பணிபுரிவார்.
எலிகளின் எண்ணிக்கையைக் கண்டறிந்து அவற்றை அழிப்பதற்கு தேவையான நடவடிக்கைகளை எடுப்பதே கொராடியின் முக்கிய பணியாகும்.
எலிகள் உணவை மாசுபடுத்தி, லெப்டோஸ்பிரோசிஸ் போன்ற நோய்களை பரப்பக்கூடும் என்று NYC சுகாதாரத் துறை இணையதளம் தெரிவித்துள்ளது. அதனால், அமெரிக்காவின் நியூயார்க் நகரத்திற்கு எலிகள் ஒரு பெரும் சவாலாக இருந்து வருகிறது.