இங்கிலாந்து இளரவசர் வில்லியம், உணவகத்தில் செய்த வேலை! வைரலாகும் வீடியோ
இளவரசர் வில்லியம் மற்றும் அவரது மனைவி இளவரசி கேட் மிடில்டன் ஆகியோர் நேற்று (ஏப்ரல் 20) இங்கிலாந்து அருகே உள்ள பர்மிங்க்ஹம் நகருக்கு, அரச வருகையாக சென்றிருந்தனர். அப்போது, அங்கிருந்த ஒரு இந்திய உணவகத்திற்குள் சென்றவர்கள், அங்கே சுற்றி பார்த்துவிட்டு, அங்கிருந்த இந்திய உணவுகளையும் சுவைத்தனர். அந்த சமயம், ஹோட்டலில் டேபிள் புக் செய்வதற்கு ஒரு அழைப்பு வந்தது. அதை அட்டென்ட் செய்த இளவரசர் வில்லியம், தான் யார் என்பதை வெளிக்காட்டாமல், ஒரு உணவாக பணியாளர் போலவே பேசிய வீடியோ ஒன்று தற்போது வைரலாகி வருகிறது. அதுமட்டுமில்லாமல், அவர்கள் உணவாக பணியாளர்களுடன் இணைந்து சப்பாத்தி செய்தும், பாத்திரங்களை அடுக்கியும் வேலை செய்தனர்.