கறுப்பின சிறுவனை துப்பாக்கியால் சுட்ட அமெரிக்கர்: தவறான கதவை தட்டியதால் நேர்ந்த விபரீதம்
அமெரிக்காவின் மிசோரியில் உள்ள வீட்டு உரிமையாளரான ஆண்ட்ரூ லெஸ்டர்(85), கறுப்பின சிறுவனான ரால்ப் யார்ல்லை(16) வியாழன் அன்று துப்பாக்கியால் சுட்டார். உயர்நிலைப் பள்ளியில் படிக்கும் மாணவரான யார்ல் தன் தம்பிகளை வீட்டுக்கு அழைத்து செல்ல சென்ற போது, தவறான கதவை தட்டியதால் இந்த துப்பாக்கி சூடு நடந்திருக்கிறது. யார்ல், 115வது மொட்டை மாடிக்குச் செல்லவதற்கு பதில், 115வது தெருவில் உள்ள ஒரு வீட்டின் அழைப்பு மணியை அடித்திருக்கிறார். இந்த தகவலை ஃபெய்த் ஸ்பூன்மோர், யார்லின் அத்தை தனது சமூக வலைதள பதிவில் குறிப்பிட்டிருக்கிறார்.
சிறுவனின் தலை மற்றும் மார்பில் துப்பாக்கியால் சுட்ட முதியவர்
யார்ல்லை சுட்டதால் ஆண்ட்ரூ லெஸ்டர் மீது ஆயுதம் ஏந்திய குற்றவியல் நடவடிக்கையின் கீழ் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இந்த சம்பவத்தைத் தொடர்ந்து உள்ளூர் மற்றும் தேசிய அளவில் எதிர்ப்புகளும் பொதுமக்களின் சீற்றமும் அதிகரித்துள்ளன. துணை அதிபர் கமலா ஹாரிஸும் இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளார். முதலில், லெஸ்டர் மீது எந்த குற்றச்சாட்டும் போடப்படாமல் விடுவிக்கப்பட்டதால் இந்த எதிர்ப்புகள் கிளம்பின. லெஸ்டர் தற்போது போலீஸ் காவலில் இல்லை. ஆனால் அவரை கைது செய்வதற்கான கைது வாரண்ட் வெளியிடப்பட்டுள்ளது. யார்ல், கன்சாஸ் நகர மருத்துவமனையில் இருந்து ஞாயிற்றுக்கிழமை அன்று வீட்டுக்கு அனுப்பப்பட்டார். அவரது தலை மற்றும் மார்பில் ஏற்பட்டிருக்கும் துப்பாக்கிச் சூட்டு காயங்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.