
போர்க்களமாக மாறி இருக்கும் சூடானில் இருந்து மக்களை வெளியேற்றிய ஜப்பான்
செய்தி முன்னோட்டம்
போர்க்களமாக மாறி இருக்கும் சூடானில் இருந்து குழந்தைகள் உட்பட 45 பேரை ஜப்பான் பாதுகாப்பாக வெளியேற்றியுள்ளது என்று அந்நாட்டின் வெளியுறவுத்துறை அமைச்சகம் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.
மேலும், இந்த பிரச்சனையால் சூடானில் இருந்த ஜப்பான் தூதரகமும் மூடப்பட்டுள்ளது.
வெளியேற்றப்பட்ட மக்கள், சூடானின் கிழக்கில் உள்ள போர்ட் சூடானில் இருந்து டிஜிபூட்டிக்கு தற்காப்பு படை விமானத்தில் கொண்டு செல்லப்பட்டதாக ஜப்பானிய அமைச்சகம் தெரிவித்துள்ளது.
மேலும், நான்கு ஜப்பானியர்கள் பிரான்ஸ் மற்றும் சர்வதேச செஞ்சிலுவை சங்கத்தின் ஒத்துழைப்புடன் வெளியேற்றப்பட்டதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வெளியேற்றப்படுவதற்கு முன், ஜப்பான் தூதரக ஊழியர்கள் உட்பட சுமார் 60 ஜப்பானியர்கள் சூடானில் சிக்கி இருப்பதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.
details
இந்தியாவின் 'ஆபரேஷன் காவேரி' தொடங்கப்பட்டது
சூடான் ஆயுதப் படைகள் மற்றும் துணை ராணுவ விரைவு ஆதரவுப் படைகளின் தலைவர்கள் சண்டையை தற்காலிகமாக நிறுத்தி உள்ளனர்.
வெளிநாட்டவர்கள் போர்க்களமாக மாறியுள்ள சூடானில் இருந்து மீட்கப்பட்டு வருகின்றனர். எனவே,பிற நாடுகளின் வேண்டுகோளுக்கு இணங்க இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
இந்த போர்நிறுத்த செய்தியை பற்றி அமெரிக்க வெளியுறவுத்துறை செயலாளர் ஆண்டனி பிளிங்கன் நேற்று பிற்பகல் தெரிவித்திருந்தார்.
சூடானில் சிக்கி இருக்கும் இந்தியர்களை மீட்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் நேற்று ட்வீட் செய்திருந்தார்.
இந்த மீட்புப் பணிக்கு 'ஆபரேஷன் காவேரி' என்று பெயரிடப்பட்டுள்ளது.