Page Loader
அதிகரித்து வரும் இந்து எதிர்ப்பு: கனடா எதிர்க்கட்சி தலைவர் கண்டனம் 
கனடாவின் கன்சர்வேட்டிவ் கட்சியின் தலைவர் பியரி பொய்லிவ்ரே

அதிகரித்து வரும் இந்து எதிர்ப்பு: கனடா எதிர்க்கட்சி தலைவர் கண்டனம் 

எழுதியவர் Sindhuja SM
Apr 24, 2023
05:28 pm

செய்தி முன்னோட்டம்

கனடாவின் பிரதான எதிர்க்கட்சியான கன்சர்வேட்டிவ் கட்சியின் தலைவர் பியரி பொய்லிவ்ரே, நாட்டில் அதிகரித்து வரும் இந்துபோபியா(இந்து மத வெறுப்பு) நிகழ்வுகளை கண்டித்துள்ளார். இது குறித்து கனடாவின் எதிர்க்கட்சி முதல்முறையாக பேசி இருக்கிறது. உள்ளூர் நெட்வொர்க்கான பிரைம் ஏசியாவுக்கு அவர் அளித்த பேட்டியில், "இந்துக்கள் மற்றும் கனேடியர்களைக் குறிவைத்து நடத்தப்படும் வன்முறைகள் மற்றும் இந்து மத வெறுப்பு கருத்துகளை நாம் நிறுத்த வேண்டும். இது முற்றிலும் ஏற்றுக்கொள்ள முடியாதது." என்று கூறியுள்ளார். வழிபாட்டுத் தலங்களில் காவலை அதிகரிப்பது, கேமராக்களை பொருத்துவது போன்றவற்றுக்கு அரசாங்க நிதி ஒதுக்கி மத வன்முறைக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார்.

DETAILS

இந்து வெறுப்பு கருத்துக்களை பரப்பும் யாரும் இதுவரை கைது செய்யப்படவில்லை 

கடந்த ஆண்டு ஜூலையில் இருந்து, கனடாவில் உள்ள இந்துக் கோவில்களை இழிவுபடுத்தும் சம்பவங்கள் பல பதிவாகி இருக்கிறது. இந்த மாதம் ஒன்டாரியோவில் இருக்கும் வின்ட்சர் நகரில் உள்ள ஸ்ரீ சுவாமிநாராயண் கோவில் சேதப்படுத்தப்பட்டது. இந்த சம்பவம் நடந்த போது பதிவான சிசிடிவி காட்சிகள் கிடைத்தாலும், அந்த வீடியோவில் இருந்த குற்றவாளிகள் இருவர் யார் என்பது இன்று வரை கண்டுபிடிக்கப்படவில்லை. இதற்கு முன் நடந்த நான்கு சம்பவங்களிலும் இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை. கனேடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவின் அமைச்சரவையில் உள்ள மூத்த உறுப்பினர்கள் வெளியுறவுத்துறை அமைச்சர் மெலானி ஜோலி, பாதுகாப்பு அமைச்சர் அனிதா ஆனந்த் உட்பட பலர் இந்த தாக்குதல்களை கண்டித்துள்ளனர்.