சூடான் சண்டையால் அதிகம் பாதிக்கப்படும் குழந்தைகள்: ஐநா
செய்தி முன்னோட்டம்
சூடானில் தற்போது நடந்து வரும் சண்டையால் இதுவரை 413 பேர் உயிரிழந்துள்ளனர் என்று உலக சுகாதார அமைப்பு(WHO) தெரிவித்துள்ளது.
மேலும், இந்த சண்டையால் குழந்தைகள் அதிகம் பாதிக்கப்படுகின்றனர் என்று ஐ.நா குழந்தைகள் நிறுவனம் கூறி இருக்கிறது.
இதுவரை, சூடான் பிரச்சனையால் 9 குழந்தைகள் உயிரிழந்துள்ளன என்றும் 50 குழந்தைகள் காயமடைந்துள்ளன என்றும் ஐ.நா குழந்தைகள் நிறுவனம் கூறியுள்ளது.
சூடான் அரசாங்கத்தின் புள்ளிவிவரங்களின்படி, இந்த மோதலினால் 413 பேர் உயிரிழந்துள்ளனர் மற்றும் 3,551 பேர் காயமடைந்துள்ளனர்.
சூடான் ராணுவத்திற்கும் துணை ராணுவ விரைவு ஆதரவுப் படைகளுக்கும்(RSF) இடையே நடந்து வரும் மோதல்களின் ஒரு பகுதியே இந்தச் சண்டையாகும்.
details
சூடானில் 10 நாட்களில் 10 தாக்குதல்கள் நடந்துள்ளது
ஏப்ரல் 15 முதல் 10 தாக்குதல்கள் சூடானில் நடந்துள்ளது என்று WHO செய்தித் தொடர்பாளர் மார்கரெட் ஹாரிஸ் கூறியுள்ளார்.
"சூடானில் உள்ள சுகாதார அமைச்சகத்தின் கூற்றுப்படி, 20 சுகாதார சேவைகள்(மருத்துவமனை போன்றவை) வேலை நிறுத்தப்பட்டுள்ளது. மேலும், 12 சுகாதார சேவைகள் வேலை நிறுத்தப்படும் அபாயத்தில் இருக்கிறது." என்று அவர் தெரிவித்துள்ளார்.
"தெளிவாக, எப்போதும் போல், சண்டைகளால் அதிக எண்ணிக்கையிலான குழந்தைகள் பாதிக்கப்படுகின்றனர். இதுவரை குறைந்தபட்சம் ஒன்பது குழந்தைகள் கொல்லப்பட்டதாகவும், குறைந்தது 50 குழந்தைகள் காயமடைந்ததாகவும் தகவல்கள் கிடைத்துள்ளன. இந்த சண்டை தொடரும் வரை அந்த எண்ணிக்கை தொடர்ந்து உயரும்." என்று செய்தியாளர் சந்திப்பில் பேசிய யுனிசெஃப் செய்தித் தொடர்பாளர் ஜேம்ஸ் எல்டர் கூறியுள்ளார்.