
இமயமலையில் 570 மில்லியன் யானைகளின் எடைக்கு சமமான பனிப்பாறைகள் இழப்பு
செய்தி முன்னோட்டம்
காலநிலை மாற்றம் மற்றும் புவி வெப்பமயமாதலால் அதிகளவிலான பனிப்பாறைகளை இமயமலை இழந்துள்ளதாக ஒரு புதிய ஆய்வில் தெரியவந்திருக்கிறது.
இமயமலையின் பரப்பளவு கடந்த 20 ஆண்டுகளில் பெரும் மாற்றத்தை கண்டுள்ளது.
முதன்முறையாக ஆராய்ச்சியாளர்கள் இமயமலையில் ஏற்பட்ட பனிப்பாறைகளின் இழப்பை முழுமையாக கணக்கிட்டுள்ளனர்.
இங்கிலாந்தின் செயின்ட் ஆண்ட்ரூஸ் பல்கலைக்கழகம், சீன அறிவியல் அகாடமி, ஆஸ்திரியாவில் உள்ள கிராஸ் தொழில்நுட்ப பல்கலைக்கழகம் மற்றும் கார்னகி மெலன் பல்கலைக்கழகம் ஆகியவை இணைந்து நடத்திய ஆய்வில் இந்த தகவல்கள் கிடைத்திருக்கின்றன.
இமயமலையின் மேற்பரப்பிற்கு கீழே உள்ள பனிப்பாறைகளின் இழப்பு, சுமார் 570 மில்லியன் யானைகளின் எடைக்கு சமமானது என்று இந்த புதிய ஆய்வின் ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
இந்தியா
மத்திய இமயமலையில் குறைத்து மதிப்பிடப்பட்ட பனிப்பாறை இழப்புகள்
இந்த ஆய்வு நேச்சர் ஜியோசயின்ஸ் இதழில் வெளியிடப்பட்டிருக்கிறது.
கடந்த 20 ஆண்டுகளில் மத்திய இமயமலையில் உள்ள பனிப்பாறை ஏரியின் வளர்ச்சி மிக வேகமாக இருந்ததாக இந்த ஆய்வு கூறுகிறது. அதாவது பனிப்பாறை அதிகமாக இந்த பகுதியில் உருகி இருக்கிறது.
ஆனால், இந்த இழப்பு இதுவரை குறைத்து மதிப்பிடப்பட்டது.
நீருக்கடியில் நிகழும் பனிப்பாறை மாற்றங்களை செயற்கைக்கோள்களால் காண முடியாது என்பதால் பல ஆண்டுகளாக இந்த பனிப்பாறை மாற்றங்கள் குறைத்து மதிப்பிடப்பட்டிருக்கிறது.
2000 முதல் 2020ஆம் ஆண்டு வரை, இப்பகுதியில் உள்ள ப்ரோக்லேசியல் ஏரிகளின் எண்ணிக்கை 47 சதவீதம் அதிகரித்திருக்கிறது. இதனால், 570 மில்லியன் யானைகளுக்கு சமமான சுமார் 2.7 Gt பனிப்பாறைகளை இமயமலை இழந்துள்ளது.