இந்து எதிர்ப்பு மற்றும் இந்து வெறுப்பு பிரிட்டிஷ் பள்ளிகளில் அதிகரிக்கிறதா
செய்தி முன்னோட்டம்
இங்கிலாந்து பள்ளிகளில் இந்து மாணவர்கள் எதிர்கொள்ளும் பாகுபாட்டின் அளவை ஒரு சிந்தனைக் குழுவின் புதிய அறிக்கை அம்பலப்படுத்தியுள்ளது.
லண்டனை தளமாகக் கொண்ட ஹென்றி ஜாக்சன் சொசைட்டியின் அறிக்கையில் இந்த ஆய்வு தகவல் கூறப்பட்டுள்ளது.
எக்ஸெட்டர் பல்கலைக்கழகத்தில் அரபு மற்றும் இஸ்லாமிய ஆய்வுகளில் முனைவர் பட்டம் பெற்ற சார்லட் லிட்டில்வுட் தலைமையில் இந்த ஆய்வுகள் நடத்தப்பட்டன.
988 இந்து பெற்றோர்களிடம் நடத்திய ஆய்வின் முடிவில், 51 சதவீத குழந்தைகள் இங்கிலாந்து பள்ளிகளில் பாகுபாட்டை எதிர்கொள்கின்றனர் என்பது தெரியவந்துள்ளது.
அதிக பாகுபாடு காட்டப்படுவதாக கூறினாலும், இந்திய மாணவர்களைக் கொண்ட பள்ளிகளில் 1 சதவீதத்திற்கும் குறைவான பள்ளிகள் மட்டும் இது குறித்து அதிகபூர்வ நடவடிக்கை எடுத்துள்ளன.
details
பாகுபாட்டால் 5 மாதங்களில் 3 பள்ளிகளை மாற்றிய மாணவர்
இந்த ஆய்வில் பங்குபெற்ற இந்துப் பெற்றோர்களில் 19 சதவீதம் பேர் மட்டுமே இந்து விரோத வெறுப்பை பள்ளிகளால் அடையாளம் காண முடியும் என்று நம்பினர்.
"இந்து எதிர்ப்பு" கெட்ட வார்த்தைகளை பயன்படுத்தி மாணவர்களை கிண்டல் செய்வதும் இந்த கணக்கெடுப்பில் பதிவு செய்யப்பட்டுள்ளது.
லிட்டில்வுட் இந்த அறிக்கைக்காக ஐந்து மாதங்கள் செலவிட்டார். அந்த 5 மாதங்களில் கிழக்கு லண்டனில் உள்ள ஒரு இந்து மாணவர் இத்தகைய பாகுபாட்டால் மூன்று முறை பள்ளிகளை மாற்றி இருக்கிறார்.
யுகே முழுவதிலும் உள்ள கல்லூரி மாணவர்கள் சம்பந்தப்பட்ட சம்பவங்களையும் இந்த அறிக்கை விவரித்துள்ளது.
லண்டன் ஸ்கூல் ஆஃப் எகனாமிக்ஸில்(LSE) மாணவர் ஒருவர் சமீபத்தில் இதே போன்ற அவதூறு பிரச்சனை தனக்கு நடந்ததாக கூறி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.