லண்டன் கல்லூரியில் இந்தியாவுக்கு எதிரான பிரச்சாரம் நடந்ததாக இந்திய மாணவர் குற்றம் சாட்டு
லண்டன் ஸ்கூல் ஆஃப் எகனாமிக்ஸ்(LSE) மாணவர் சங்கத் தேர்தலில் வேண்டுமென்றே திட்டமிட்டு நடத்தப்பட்ட அவதூறு பிரச்சாரத்தின் விளைவாக தான் தகுதி நீக்கம் செய்யப்பட்டதாக இந்திய மாணவர் ஒருவர் குற்றம்சாட்டியுள்ளார். "நான் இந்துவாகவும் இந்தியனாகவும் இருப்பது தான் அதற்கு முக்கிய காரணம்" என்றும் அவர் கூறியுள்ளார். ஹரியானாவைச் சேர்ந்த கரண் கட்டாரியா, லண்டனில் உள்ள முன்னணி பல்கலைக்கழகத்தில் முதுகலை சட்டப் பட்டப்படிப்பு படித்து வருகிறார். LSE மாணவர் சங்கத்தின்(LSESU) பொதுச் செயலாளர் பதவிக்கு போட்டியிட அவரது நண்பர்களின் ஆதரவால் அவருக்கு ஆர்வம் ஏற்பட்டிருக்கிறது. ஆனால், கடந்த வாரம் "அடிப்படையற்ற குற்றச்சாட்டுகளால்" தான் தகுதிநீக்கம் செய்யப்பட்டதாகவும் தன் பக்க நியாயத்தை முழுமையாகக் கூற தனக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை என்றும் அவர் கூறியுள்ளார்.
மாணவர் கரண் கட்டாரியா கூறி இருப்பதாவது:
துரதிர்ஷ்டவசமாக, இந்திய-இந்து ஒருவர் LSESUக்கு தலைமை தாங்குவதைக் கண்டு சகிக்க முடியாமல், நமது சமூகங்களை வேரோடு பிடுங்கி எறியும் அவதூறுகளை சிலர் பரப்பி வருகின்றனர். நான் LSEயில் முதுகலைப் படிப்பைத் தொடங்கியபோது, மாணவர் நலனுக்கான எனது ஆர்வத்தை மேம்படுத்த மேலும் பாடுபடுவேன் என்று நான் நம்பினேன். ஆனால், எனது இந்திய மற்றும் இந்து அடையாளத்தின் காரணமாக எனக்கு எதிராக வேண்டுமென்றே திட்டமிட்ட அவதூறு பிரச்சாரம் தொடங்கப்பட்டபோது எனது கனவுகள் சிதைந்தன. அனைத்து தேசிய மாணவர்களிடமிருந்தும் அபரிமிதமான ஆதரவைப் பெற்ற போதிலும், LSE மாணவர் சங்கத்தின் பொதுச் செயலாளர் தேர்தலில் இருந்து நான் தகுதி நீக்கம் செய்யப்பட்டேன். என்று அவர் கூறியுள்ளார். அனைத்தை முடிவுகளும் LSESUவின் விதிகளின் படி எடுக்கப்பட்டுள்ளதாக அந்த அமைப்பு கூறியுள்ளது.