இந்தியா-பிரான்ஸ் இணைந்து நடத்தும் 'ஓரியன்' ராணுவ பயிற்சி
செய்தி முன்னோட்டம்
பிரான்சும் இந்தியாவும் இணைந்து இன்று(ஏப் 17) பிரெஞ்சு வான் மற்றும் விண்வெளிப் படையின்(FASF) விமானப்படை தளமான மாண்ட்-டி-மார்சனில் 'ஓரியன்' என்ற இராணுவப் பயிற்சியைத் தொடங்க உள்ளன.
"இன்று முதல் #ஓரியன்2023 பயிற்சியில் பங்கேற்கும் இந்திய விமானப்படைக்(IAF) குழுவை பிரான்ஸ் அன்புடன் வரவேற்கிறது. பிரான்ஸ் மற்றும் இந்திய ரஃபேல் ஜெட் விமானங்கள் விரைவில் பிரான்சின் வானில் பறக்கும்." என்று பிரான்ஸ் தூதர் இம்மானுவேல் லெனைன் ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.
நான்கு ரஃபேல் விமானங்கள், இரண்டு சி-17, இரண்டு எல்எல்-78 விமானங்கள் மற்றும் 165 வான்வீரர்கள் அடங்கிய இந்திய விமானப்படையின் குழு, 17 ஏப்ரல் முதல் மே 05, 2023 வரை இந்தப் பயிற்சியில் கலந்துகொள்ளும்.
details
பிரெஞ்சு பாதுகாப்பு படை நடத்தும் மிகப் பெரிய பன்னாட்டுப் பயிற்சி
இந்திய விமானப்படையின் ரஃபேல் விமானங்களுக்கான முதல் வெளிநாட்டுப் பயிற்சி இதுவாகும் என்று பாதுகாப்பு அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
IAF மற்றும் FASFஐ தவிர, ஜெர்மனி, கிரீஸ், இத்தாலி, நெதர்லாந்து, யுனைடெட் கிங்டம், ஸ்பெயின் மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகளின் விமானப்படைகளும் இந்த பயிற்சியில் கலந்துகொள்ளும்.
இந்திய ரஃபேல் போர் விமானம் பிரான்சால் நடத்தப்படும் ஓரியன் என்ற பன்னாட்டு போர் விளையாட்டில் பங்கேற்க வாய்ப்புள்ளது என்று பாதுகாப்பு அதிகாரிகள் முன்பு தெரிவித்திருந்தனர்.
ஓரியன் என்பது பிரெஞ்சு பாதுகாப்புப் படைகளால் மேற்கொள்ளப்படும் மிகப் பெரிய பன்னாட்டுப் பயிற்சி என்று கூறப்படுகிறது.
இந்த பயிற்சிகளில் அந்நாட்டின் இராணுவம், கடற்படை மற்றும் விமானப்படை ஆகியவை பங்கேற்கும்.