Page Loader
இன வெறுப்பு: இந்திய-இஸ்லாமியர்களை விரட்டிவிட்ட சிங்கப்பூர் சூப்பர் மார்க்கெட் 
ஜஹபர் இந்தியராக இருந்தாலும், அவரது மனைவி ஃபரா இந்திய-மலேசியர் ஆவார்.

இன வெறுப்பு: இந்திய-இஸ்லாமியர்களை விரட்டிவிட்ட சிங்கப்பூர் சூப்பர் மார்க்கெட் 

எழுதியவர் Sindhuja SM
Apr 12, 2023
05:32 pm

செய்தி முன்னோட்டம்

சிங்கப்பூரில் உள்ள ஒரு முன்னணி சூப்பர் மார்க்கெட, இந்திய வம்சாவளியைச் சேர்ந்த முஸ்லீம் தம்பதியிடம் மன்னிப்பு கேட்டுள்ளது. ரம்ஜான் பண்டிகையின் போது வழங்கப்பட்ட இலவச தின்பண்டங்கள் மலேசியர்களுக்கு மட்டும் தான் என்று சொல்லி இந்திய தம்பதியரை விரட்டிவிட்டதால் அந்த சூப்பர் மார்க்கெட் மன்னிப்பு கேட்டுள்ளது. ஜஹபர் ஷாலிஹ்(36) மற்றும் அவரது மனைவி ஃபரா நதியா(35) தங்கள் இரு குழந்தைகளுடன் ஏப்ரல் 9 ஆம் தேதி, தேசிய தொழிற்சங்க காங்கிரஸ்(NTUC) நடத்தும் சூப்பர் மார்க்கெட்டிற்கு சென்றிருந்தனர். அப்போது, ரம்ஜான் பண்டிகைக்கு வழங்கப்பட்ட இலவச தின்பண்டங்கள் மலேசியர்களுக்கு மட்டும் தான் என்று கூறிய சூப்பர் மார்க்கெட் பணியாளர்கள், இந்திய தம்பதியினரை விரட்டிவிட்டதாக செய்திகள் வெளியாகின.

details 

நடந்த சம்பவத்திற்கு மன்னிப்பு கேட்க விரும்புகிறோம்: சூப்பர் மார்க்கெட் 

ஜஹபர் இந்தியராக இருந்தாலும், அவரது மனைவி ஃபரா இந்திய-மலேசியர் ஆவார். ஃபரா ஞாயிற்றுக்கிழமை அன்று நடந்த சம்பவத்தை ஒரு பேஸ்புக் பதிவில் விவரித்திருந்தார். இது 500 க்கும் மேற்பட்ட லைக்குகளைக் பெற்றுள்ளது. சூப்பர் மார்க்கெட்டில் உள்ள "இஃப்தார் பைட்ஸ் ஸ்டேஷனில்" இந்த சம்பவம் நடந்ததாக ஜஹபர் கூறியுள்ளார். சம்பவத்தின் போது, ஒரு பணியாளர், "இந்தியர்களுக்கு கிடையாது, மலேசியர்களுக்கு மட்டும் தான்" என்று கூறி இருக்கிறார். "இந்த சம்பவத்திற்கு மன்னிப்பு கேட்க நாங்கள் விரும்புகிறோம். எங்கள் பணியாளர்களுக்கும் நாங்கள் அறிவுரை வழங்கியுள்ளோம். ஒரு மாத கால ரம்ஜானின் போது, அனைத்து முஸ்லீம் வாடிக்கையாளர்களுக்கும் 'இஃப்தார் பைட்ஸ்' இலவசமாக வழங்கப்படுகின்றன என்பதை தெளிவுபடுத்த நாங்கள் விரும்புகிறோம்." என்று அந்த சூப்பர் மார்க்கெட் தெரிவித்துள்ளது.