Page Loader
தொடர்ந்து உருகிவரும் பனிப்பாறைகள்.. அதிர்ச்சி தரும் அறிக்கை!
உருகும் பனிப்பாறை

தொடர்ந்து உருகிவரும் பனிப்பாறைகள்.. அதிர்ச்சி தரும் அறிக்கை!

எழுதியவர் Prasanna Venkatesh
Apr 21, 2023
11:25 am

செய்தி முன்னோட்டம்

IMBIE (Ice Sheet Mass Balance Intercomparison Exercise) என்பது பனிப்பாறைகள் உருகுவதைக் கண்காணிக்க நாசா மற்றும் ஐரோப்பிய விண்வெளி ஆய்வு மையம் (ESA) சேர்ந்து உருவாக்கிய ஒரு திட்டம். கிரீன்லாந்து மற்றும் அன்டார்டிகா பகுதிகளில், 1990-களில் இருந்ததை விட இன்று ஐந்து மடங்கு அதிகமாக பனிப்பாறைகள் உருகிவருவதாக IMBIE-ன் சமீபத்திய தகவல்கள் தெரிவிக்கின்றன. ESA-வின் கிரியேசாட் செயற்கைக்கோள் மற்றும் பிற புவியீர்ப்பு விசை குறித்த தகவல்களை அளிக்கக்கூடிய செயற்கைகோள்கள் அளிக்கும் தகவல்களை கொண்டு பனிப்பாறைகள் எவ்வளவு உருகுகின்றன எனக் கணக்கிடுகிறார்கள். இந்த அளவீடுகளைத் தான் சர்வேதச காலநிலை மாற்ற கண்காணிப்புக் குழுவும் (IPCC), பிற உலக நாடுகளும் காலநிலை மாற்றத்தை அளவிடப் பயன்படுத்துகின்றன.

காலநிலை மாற்றம்

எவ்வளவு பனிப்பாறைகள் உருகியிருக்கின்றன? 

1922 முதல் 2020 வரை இரு துருவங்களிலும் 7,560 பில்லியன் டன் பனிப்பாறைகள் உருகியிருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதுவும், கடந்த பத்து ஆண்டுகளில் பணிப்பாறைகள் உருகும் அளவு மிக வேகமாக இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 2019-ல் மிக அதிக அளவிலான பனிப்பாறைகள் உருகியிருக்கின்றன. அந்த ஆண்டில் மட்டும் கிரீன்லாந்து மற்றும் அன்டார்டிகாவில் சேர்த்து 612 பில்லியன் டன் பனிப்பாறைகள் உருகியிருக்கின்றன. 1992 முதல் பனிப்பாறைகள் உருகியதால் மட்டும் 21மிமீ அளவு கடல் மட்டும் உயர்ந்திருக்கிறது. 1990-களில் கடல் மட்ட உயர்வில் பனிப்பாறைகள் உருகுவது 5.6% மட்டுமே பங்களித்திருந்த நிலையில், தற்போது பனிப்பாறைகள் உருகுவது தான் 25.6% கடல் மட்ட உயர்விற்கு வழிவகுத்திருக்கிறது. கடல்மட்டம் தொடர்ந்து உயர்வதால் முதலில் பாதிக்கப்படப்போவது கடலோர பகுதிகளில் வாழும் மக்கள் தான்.