NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil

    இந்தியா உலகம் வணிகம் விளையாட்டு தொழில்நுட்பம் பொழுதுபோக்கு ஆட்டோ வாழ்க்கை காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
     
    வீடு / செய்தி / உலகம் செய்தி / அமெரிக்க பண்ணையில் பெரும் தீ விபத்து: 18,000+ மாடுகள் உயிரிழப்பு
    அமெரிக்க பண்ணையில் பெரும் தீ விபத்து: 18,000+ மாடுகள் உயிரிழப்பு
    உலகம்

    அமெரிக்க பண்ணையில் பெரும் தீ விபத்து: 18,000+ மாடுகள் உயிரிழப்பு

    எழுதியவர் Sindhuja SM
    April 14, 2023 | 11:28 am 1 நிமிட வாசிப்பு
    அமெரிக்க பண்ணையில் பெரும் தீ விபத்து: 18,000+ மாடுகள் உயிரிழப்பு
    எரியும் கட்டிடத்திற்குள் சிக்கியிருந்த ஒருவரை தீயணைப்பு வீரர்கள் மீட்டனர்

    அமெரிக்காவின் டெக்சாஸில் உள்ள 'சவுத்ஃபோர்க் டெய்ரி ஃபார்ம்ஸ்' என்ற ஒரு குடும்ப பால் பண்ணையில் ஏற்பட்ட தீ விபத்தால் 18,000க்கும் மேற்பட்ட மாடுகள் உயிரிழந்தன. இந்த சம்பவம் அமெரிக்காவில் இதுவரை பதிவு செய்யப்பட்ட தீ விபத்துகளிலேயே பெரியது என்று ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. தீ விபத்து ஏற்பட்டதற்கான காரணம் இன்னும் சரியாக தெரியவில்லை. பண்ணையின் உரிமையாளர்கள் சம்பவம் குறித்து இதுவரை எந்த கருத்தும் தெரிவிக்கவில்லை. காஸ்ட்ரோ கவுண்டி ஷெரிஃப் அலுவலகத்தால் பகிரப்பட்ட படங்கள், பண்ணையில் இருந்து பெரும் புகை வெளியே வருவதை காட்டியது. எரியும் கட்டிடத்திற்குள் சிக்கியிருந்த ஒருவரை தீயணைப்பு வீரர்கள் மீட்டனர் என்று ஷெரிப் அலுவலகம் தெரிவித்துள்ளது.

    வருத்தம் தெரிவித்த விலங்குகள் நல நிறுவனம்

    பொது சுகாதாரம் மற்றும் பாதுகாப்பு காரணங்களுக்காக பண்ணைக்கு செல்லும் அனைத்து சாலைகளும் மூடப்பட்டுள்ளன. ஒவ்வொரு ஆண்டும் நூறாயிரக்கணக்கான பண்ணை விலங்குகளைக் கொல்லும் தீ விபத்துகளை தடுக்க, கூட்டாட்சி சட்டங்கள் இயற்ற வேண்டும் என்று விலங்குகள் நல நிறுவனம் (AWI) தெரிவித்துள்ளது. இத்தகைய தீ விபத்தில் இருந்து விலங்குகளை பாதுகாக்க எந்த கூட்டாட்சி விதிமுறைகளும் இதுவரை இல்லை என்று AWI வருத்தம் தெரிவித்துள்ளது. 2013 ஆம் ஆண்டு AWI இதுபோன்ற சம்பவங்களை கண்காணிக்கத் தொடங்கியதில் இருந்து, டெக்சாஸ் பண்ணையில் ஏற்பட்டிருக்கும் இந்த தீ விபத்து தான், கால்நடைகளுக்கு ஏற்பட்ட மிகப்பெரும் தீ விபத்து என்று விலங்குகள் நல நிறுவனம் (AWI) கூறியுள்ளது.

    இந்த காலவரிசையைப் பகிரவும்
    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    அமெரிக்கா

    அமெரிக்கா

    நியூயார்க்: எலிகளை விரட்டுவதற்கு 1 கோடி ரூபாய் சம்பளம்  உலகம்
    அமெரிக்கா செல்லும் திண்டுக்கல் 7ம் வகுப்பு அரசு பள்ளி மாணவி  தமிழ்நாடு
    சிலிக்கான் வேலி வங்கி திவால்.. இந்தியாவில் ஏற்படுத்திய பின்விளைவுகள் என்ன?  முதலீடு
    ராணுவ படைகளை அனுப்பி தைவானை பயமுறுத்தும் சீனா: என்ன நடக்கிறது  சீனா
    அடுத்த செய்திக் கட்டுரை

    உலகம் செய்திகளை விரும்புகிறீர்களா?

    புதுப்பித்த நிலையில் இருக்க குழுசேரவும்.

    World Thumbnail
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2023