பயங்கரவாதத்திற்கு நிதி அளித்ததற்காக லண்டனில் கைது செய்யப்பட்ட தமிழர்
தடைசெய்யப்பட்ட பயங்கரவாத அமைப்பான ஹிஸ்புல்லாவுக்கு நிதியுதவி செய்தது தொடர்பான வழக்கில் 66 வயது தமிழர், சுந்தர் நாகராஜன், லண்டனில் கைது செய்யப்பட்டார். அமெரிக்க அதிகாரிகளின் கோரிக்கையை அடுத்து, நாகராஜனை தேசிய நாடு கடத்தல் பிரிவினர் கைது செய்தனர். அமெரிக்காவுக்கு எதிராக சதி செய்தது, அமெரிக்க பொருளாதாரத் தடைகளைத் தவிர்த்தது உள்ளிட்ட குற்றச்சாட்டுகள் அவர் மீது சுமத்தப்பட்டுள்ளது. காசிவிஸ்வநாதன் நாகா என்றும் நாகராஜன் சுந்தர் பூங்குளம் என்றும் அழைக்கப்படும் நாகராஜன், தமிழகத்தின் மதுரையைச் சேர்ந்தவர்.
ஹெஸ்பொல்லா என்னும் 'பயங்கரவாத அமைப்பு'
அவர் கலை சேகரிப்பாளரும் வைர வியாபாரியுமான நாசிம் அகமதுவின் சர்வதேச கணக்காளர் என்று கூறப்படுகிறது. நாசிம் அகமது, பயங்கரவாதத்திற்கு நிதியுதவி செய்ததாக சந்தேகத்தின் பேரில் பிரிட்டிஷ் காவல்துறையினரால் இதற்கு முன் கைது செய்யப்பட்டார். ஹெஸ்பொல்லா என்பது ஈரானால் ஆதரிக்கப்படும் லெபனானில் உள்ள ஒரு போராளிக் குழுவாகும். இங்கிலாந்து மற்றும் அமெரிக்க அரசாங்கங்கள் இந்த குழுவை 'பயங்கரவாத அமைப்பு' என்று அறிவித்துள்ளது.