ஒரே பாலின உறவுகள் குற்றமற்றது: இந்தியாவை முன்னுதாரணமாக எடுத்துக்கொண்ட இலங்கை
ஒரே பாலின உறவுகளை குற்றமற்றதாக மாற்றும் சட்டமூலத்திற்கு இலங்கை உச்ச நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. திருமண சமத்துவ மனுக்களை இலங்கை உச்ச நீதிமன்றத்தின் அரசியல் சாசன அமர்வு ஏழாவது நாளாக விசாரித்து வருகிறது. இந்த மனுக்களின் விசாரணையின் போது, இந்திய உச்ச நீதிமன்றத்தின் புட்டசாமி(2017) மற்றும் நவ்தேஜ் ஜோஹர்(2018) வழக்கு தீர்ப்புகள் முன்னுதாரணமாக எடுத்துக்கொள்ளப்பட்டது. புட்டசாமி(2017) மற்றும் நவ்தேஜ் ஜோஹர்(2018) ஆகிய இரண்டு வழக்குகளும், இந்திய LGBTQIA+ சமூகத்தின் வரலாற்றில் மிக முக்கியமான திருப்புமுனையாக அமைந்த வழக்குகளாகும். இந்த வழக்குகளால் தான் ஒரே பாலின உறவுகள் இந்தியாவில் குற்றமற்றதாக்கப்பட்டது. அதுவரை, ஒரே பாலின உறவுகளில் இருந்தவர்கள் குற்றவாளிகளாக கருதப்பட்டனர்.
அடுத்து காத்திருக்கும் பாராளுமன்ற விவாதம்
இலங்கையில் ஒரே பாலின உறவுகள் என்பது சட்டப்படி மிகப்பெரும் குற்றாமாகும். பல தசாப்தங்களாக இலங்கையின் LGBTQIA+ சமூகம் சமத்துவம் கோரி போராடி வருகின்றன. இந்நிலையில், தற்போது இலங்கையின் உச்ச நீதிமன்றம் ஒரே பாலின உறவுகளை குற்றமற்றதாக்கும் சட்டமூலம் "அரசியலமைப்புக்கு முரணானது அல்ல" என்று தீர்ப்பளித்துள்ளது. எனவே, இது ஒரு பாராளுமன்ற விவாதத்திற்கும் வாக்கெடுப்பிற்கும் வழி வகுக்கும். கடைசியாக 1995 ஆம் ஆண்டு இலங்கை பாராளுமன்றத்தில் ஒரே பாலின உறவுகளை குற்றம் என கூறும் சட்டங்களை நீக்குவதற்கான முயற்சி மேற்கொள்ளப்பட்டது. எனினும், அதற்கு சரியான முடிவு எடுக்கப்படவில்லை. இதை மிகப்பெரும் வெற்றி படியாக சமூக ஆர்வலர்கள் பார்க்கின்றனர். எனினும், இந்த முடிவு சட்டமாக்கப்பட வேண்டும் என்றால், இலங்கை பாராளுமன்றம் இதற்கு ஒப்புக்கொள்ள வேண்டும்.