திருநங்கைகளுக்கான மருத்துவ சிகிச்சைகளை தடை செய்யும் டெக்சாஸ்!
அமெரிக்கா டெக்சாஸ் மாகாணத்தில், திருநங்கைகளுக்கான மருத்துவ சிகிச்சைகள் மீதான தடையை அமல்படுத்தும் மிகப்பெரிய மாநிலமாக மாற உள்ளது. ஜனநாயகக் கட்சியினர் இதனை கடுமையாக எதிர்த்த போதிலும், டெக்சாஸ் சட்டமன்றம் திருநங்கைகளுக்கான ஹார்மோன், பருவமடைவதைத் தடுக்கும் சிகிச்சைகள், அறுவை சிகிச்சைகள் மற்றும் மருத்துவ உதவிகளைத் தடை செய்யும் மசோதாவுக்கு ஒப்புதல் அளித்துள்ளது. மருத்துவ சிகிச்சையில் இருந்த திருநங்கைகளுக்கு வரையறுக்கப்பட்ட விலக்கு உள்ளது. ஆனால், இந்த நபர்கள் குறிப்பிடப்படாத காலத்திற்குள் படிப்படியாக தங்கள் மருந்துகளை நிறுத்த வேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்தச் சட்டத்தின் கீழ், கருத்தடை, உடல் பாகங்களை அகற்றுவது, அறுவை சிகிச்சை செய்யும் மருத்துவர்களுக்கு கண்டிப்பாகத் தடை விதிக்கப்பட்டுள்ளது. மருந்துகள் மற்றும் மருத்துவ ஆலோசனைகளை பரிந்துரைக்கவும் மருத்துவர்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
சர்ச்சைக்குரிய சட்டத்துக்கு ஆளுநரின் ஒப்புதல்
இந்த சர்ச்சைக்குரிய சட்டம் அமல் படுத்துவதற்காக ஆளுநரின் ஒப்புதல் கையெழுத்துக்காக காத்திருக்கிறது. சட்டத்தில் கையொப்பமிட்டால், திருநங்கைகளுக்கான மாற்று மருத்துவ சேவையை தடை செய்யும் மிகப்பெரிய மாநிலமாக டெக்சாஸ் மாறும். மசோதாவின் விதிகளின்படி, தற்போது பரிந்துரைக்கப்பட்ட மருத்துவ சிகிச்சையில் இருக்கும் மாற்றுபாலின சிறார்களுக்கு "ஒரு குறிப்பிட்ட காலத்திற்குள் பாதுகாப்பான மற்றும் மருத்துவ ரீதியான முறையில்" படிப்படியாக மருந்துகளை நிறுத்துவதற்கான வாய்ப்பு உள்ளது. ஆளுநர் கையொப்பமிட்டால் இந்த மசோதா செப்டம்பர் 1 ஆம் தேதி அமலுக்கு வரும். இந்தத் தடை குடியரசுக் கட்சித் தலைவர்களின் முயற்சியின் ஒரு பகுதியாகும். இந்தச் சட்டத்தின் விளைவுகள் மற்றும் விசாரணைகள் டெக்சாஸில் திருநங்கைகளுக்கு எதிர்காலத்தில் மருத்துவச் சேவைகள் கிடைக்குமா என்ற கவலையை எழுப்பியுள்ளன.
இந்த காலவரிசையைப் பகிரவும்