தனது 58 வயதில், 8வது குழந்தைக்கு தந்தையாகும் முன்னாள் பிரிட்டிஷ் பிரதமர் போரிஸ் ஜான்சன்
முன்னாள் பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சனின் 3வது மனைவியான கேரி(35)தான் கர்ப்பமாக உள்ளதாக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு ஒன்றினை செய்துள்ளார். போரிஸ் ஜான்சனும், கேரியும் கடந்த 2021ம் ஆண்டு திருமணம் செய்துக்கொண்டனர். இவர்களுக்கு வில்ரெட் என்னும் பெயரில் 3வயது மகனும், ரோமி என்னும் பெயருடைய 1வயது மகளும் உள்ளார்கள். தொடர்ந்து 3வதுமுறையாக கேரி கர்ப்பமாகவுள்ள நிலையில் இன்னும் சிலவாரங்களில் பிறக்கவிருக்கும் தங்களது குட்டி குழந்தையினை காண ஆர்வமாக காத்திருப்பதாக கேரி கூறியுள்ளார். மேலும் தனது மகனான வில்ரெட் தான் மீண்டும் பெரிய சகோதரனாக உள்ளதை நினைத்தால் உற்சாகமாகவுள்ளது என்று இடைவிடாமல் கூறிவருவதாகவும் கேரி இன்ஸ்ட்டாகிராமில் பதிவுச்செய்துள்ளார். 58 வயதாகும் போரிஸ் ஜான்சனுக்கு தற்போது பிறக்கவுள்ள குழந்தை 8வது குழந்தை என்பது குறிப்பிடவேண்டியவை.
3 திருமணம் செய்து கொண்ட போரிஸ் ஜான்சன்
ஏற்கனவே போரிஸ் ஜான்சனுக்கு நடந்த திருமணங்களில் அவருக்கு 5 குழந்தைகள் உள்ளது. இவருடைய முதல் மனைவியான அலெக்ரா மோஸ்ட்டின் ஓவனுக்கு குழந்தைகள் இல்லை. இதனை தொடர்ந்து போரிஸ் ஜான்சனின் அடுத்த முன்னாள் மனைவியான மெரினா வீலர் என்பவரோடு இவருக்கு 4 பிள்ளைகள் உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கிறது. மேலும் ஹெலன் மெக்இன்டிரே என்னும் பெண்ணுடன் இவர் நெருக்கமாக பழகிய நிலையில் அவருக்கு ஸ்டெப்பானி என்னும் மகள் உள்ளதாகவும் கூறப்படுகிறது. இதன் பின்னரே போரிஸ் ஜான்சன் கேரியை 3வது முறையாக 2021ம் ஆண்டில் திருமணம் செய்துள்ளார். கேரிக்கும் போரிஸ் ஜான்சனுக்கும் முன்னதாக 2 குழந்தைகள் உள்ள நிலையில் தற்போது 3வதாக பிறக்கவிருக்கும் குழந்தை போரிஸ் ஜான்சனுக்கு பிறக்கும் 8வது குழந்தை என்பது குறிப்பிடத்தக்கது.