
இங்கிலாந்து அரசர் சார்லஸின் வீங்கி போன விரல்கள்: காரணம் என்ன
செய்தி முன்னோட்டம்
இங்கிலாந்து வெஸ்ட்மின்ஸ்டர் அபேயில் நடந்த முடிசூட்டு விழாவில் மூன்றாம் சார்லஸ் மன்னருக்கு முடிசூட்டப்பட்டது.
பிரிட்டன் ராணியான இரண்டாம் எலிசபெத்தின் மரணத்தை அடுத்து, அவரது மகன் அரியணை ஏறினார்.
இதற்கிடையில், அரசர் சார்லஸின் விரல்கள் சிவந்து வீங்கி இருப்பதாக பல செய்திகள் வெளியாகி உள்ளது.
சமூக வலைத்தளங்களில் இந்த செய்திகள் பரவலாக பேசப்பட்டு வருகிறது.
முடிசூட்டு விழாவின் போது எடுக்கப்பட்ட புகைப்படங்களில் அவரது விரல்கள் மிகவும் சிவந்திருப்பது நன்றாக தெரிகிறது.
இந்நிலையில், பல்வேறு மருத்துவ நிபுணர்கள், இதற்கு காரணம் என்னவாக இருக்கும் என்ற ஊகங்களை சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து வருகின்றனர்.
அவர்களின் கூற்றுப்படி, சார்லஸின் விரல்கள் எடிமா என்ற நிலை காரணமாக வீங்கி இருக்கலாம் என்று கூறப்படுகிறது.
details
நீர்கோர்த்து கொள்வதால் எடிமா ஏற்படுகிறது
எடிமா என்பது கைகள், கணுக்கால், பாதங்கள் மற்றும்/அல்லது கால்களில் வீக்கத்தை ஏற்படுத்தும் ஒரு நிலையாகும்.
பொதுவாக, மேற்குறிப்பிட்ட பகுதிகளில் நீர்கோர்த்து கொள்வதால் இது ஏற்படுகிறது.
இது குறித்து, அவரது தாயார் ராணி எலிசபெத், சார்லஸின் முன்னாள் இசை ஆசிரியருக்கு எழுதிய கடிதத்தில் குறிப்பிட்டிருக்கிறார்.
"என் குழந்தை மிகவும் இனிமையானவன். நாங்கள் அவனை நினைத்து மிகவும் பெருமைப்படுகிறோம். என் குழந்தைக்கு சுவாரஸ்யமான ஒரு ஜோடி கைகள் இருக்கிறது. அவை மிகவும் பெரியவை. மெல்லிய நீண்ட என்னுடைய விரல்கள் போல் அவை இல்லை. நிச்சயமாக அவனுடைய தந்தையைப் போலும் அவனுக்கு கைகள் இல்லை. அவை வருங்காலத்தில் எப்படி இருக்கும் என்பதைப் பார்க்க எனக்கு ஆர்வமாக இருக்கிறது." என்று அவர் அந்த கடிதத்தில் குறிப்பிட்டிருக்கிறார்.