
இந்தியாவில் உள்ளவர்கள் கிரீன் கார்டைப் பெறுவதற்கு ஏன் இவ்வளவு தாமதமாகிறது !
செய்தி முன்னோட்டம்
அமெரிக்காவில் வசிக்க விரும்பும் சிலர் கிரீன் கார்டு பெறுவதில் சிரமப்படுகின்றனர்.
மற்ற நாடுகளை சேர்ந்தவர்கள், எத்தனை பேருக்கு கிரீன் கார்டுகள் வழங்கலாம் என விதி உள்ளது.
மேலும் அந்த விதிகளை அமெரிக்க அரசாங்கத்தில் உள்ள முக்கிய நபர்களால் மட்டுமே மாற்ற முடியும்.
யுனைடெட் ஸ்டேட்ஸ் குடியுரிமை & குடிவரவு சேவைகள் இயக்குநரின் மூத்த ஆலோசகர் டக்ளஸ் ரேண்ட், "ஒவ்வொரு ஆண்டும், பிற நாடுகளில் இருந்து எத்தனை பேர் தங்கள் குடும்பத்துடன் வாழ வரலாம் என்று காங்கிரஸ் ஒரு வரம்பை நிர்ணயித்துள்ளது."
"இந்த வரம்பு உலகம் முழுவதும் 2, 26,000 ஆகும். யுனைடெட் ஸ்டேட்ஸில் எத்தனை பேர் வேலைக்கு வரலாம் என்பதற்கும் வரம்பு உள்ளது, இது வருடத்திற்கு 1,40,000 பேர்" என்றார்.
Green card Visa
கிரீன் கார்டுகள்
அமெரிக்கா விசா கிடைக்கபெறுபவர்களின் எண்ணிக்கை ஆண்டுதோறும் குறைவாகவே உள்ளது. அதற்கு காரணம், ஒவ்வொரு நாட்டிற்கும் 7% வரம்பு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இதனால் இந்தியா, சீனா, மெக்சிகோ & பிலிப்பைன்ஸ் ஆகிய நாடுகளைச் சேர்ந்த ஏராளமானோர் நீண்ட காலம் காத்திருக்க வேண்டியுள்ளது என்று ரேண்ட் கூறினார்.
ஒவ்வொரு ஆண்டும், ஒரு குறிப்பிட்ட எண்ணிக்கையிலானவர்கள் மட்டுமே விசா அப்ளை செய்ய அனுமதிக்கப்படுகிறார்கள்.
"எங்கள் நாட்டிற்கு மக்களை அனுமதிக்கும் பொறுப்பில் உள்ளவர்கள், விசா வழங்குவதை நிறுத்தும் தேதியை நிர்ணயம் செய்கிறார்கள். எனவே அவர்கள் ஒரே நேரத்தில் பலரை அனுமதிக்க மாட்டார்கள்"என்றும், "யார், எந்த நாட்டிலிருந்து வரலாம் என்ற விதிமுறைகளும் அரசிடம் உள்ளது" என்று ரேண்ட் கூறினார்.