
இத்தாலியில் திடீரென்று வெடித்த வேன்: பல வாகனங்கள் சேதம்
செய்தி முன்னோட்டம்
வடக்கு இத்தாலியின் மிலன் நகரில் திடீரென்று ஒரு வேன் வெடித்ததால் பல வாகனங்கள் தீப்பிடித்து எரிந்தன.
இதில் ஒருவர் காயமடைந்ததாக தீயணைப்புப் படை தெரிவித்துள்ளது. உயிரிழப்புகள் குறித்த தகவல் எதுவும் வெளியாகவில்லை.
ஆக்சிஜன் வாயு கேனிஸ்டர்களை ஏற்றிச் சென்ற வேனில் இந்த வெடிப்பு ஏற்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுவதாக இத்தாலிய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
சம்பவ இடத்தில் எடுக்கப்பட்ட வீடியோக்கள் சமூக வலைதளங்களில் பகிரப்பட்டுள்ளது.
பல வாகனங்கள் தீப்பிடித்து எரிந்துள்ளன. அருகில் உள்ள கட்டிடங்களிலும் தீ பரவி இருப்பதை அந்த வீடியோக்கள் காட்டுகின்றன.
மேலும், தீயணைப்புப் படை மற்றும் காவல்துறை மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளது.
இந்த விபத்தால், ஒரு பள்ளி மற்றும் குடியிருப்பு கட்டிடம் காலி செய்யப்பட்டுள்ளதாக செய்திகள் கூறுகிறது.
ட்விட்டர் அஞ்சல்
சம்பவத்தின் போது எடுக்கப்பட்ட வீடியோ
BREAKING VIDEO: SEVERAL VEHICLES ON FIRE AFTER LARGE EXPLOSION IN MILAN ITALY pic.twitter.com/lOmJ8sBPxM
— Insider Paper (@TheInsiderPaper) May 11, 2023