கேன்ஸ் 2023: உலகத் திரைப்பட விழாவில் இந்தியத் திரைப்படங்கள்
உலகின் பிரபலமான திரைப்பட விழாவான கேன்ஸ் விழா 2023 தொடங்கியுள்ளது. இந்த நிகழ்வில் இந்தியத் திரைப்படங்கள் பல காட்சிப்படுத்தப்படவுள்ளன.ஈஷா குப்தா மற்றும் அனுஷ்கா சர்மா உட்பட பல இந்திய பிரபலங்களும் கேன்ஸ் திரைப்பட விழாவின் 73 வது சீசனில் அறிமுகமாக உள்ளனர். அனுராக் காஷ்யப்பின் "கென்னடி" திரைப்படம் கேன்ஸ் திரைப்பட விழாவின் மிட்நைட் ஸ்கிரீனிங்ஸ் பிரிவில் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. இறந்துவிட்டதாகக் கருதப்படும் ஒரு முன்னாள் போலீஸ்காரரின் கதை படமாக எடுக்கபட்டுள்ளது. இப்படத்தில் சன்னி லியோன், ராகுல் பட் மற்றும் அபிலாஷ் தப்லியால் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.
கேன்ஸ் திரைப்பட விழா
கேன்ஸ் திரைப்பட விழாவின் டைரக்டர்ஸ் ஃபோர்ட்நைட் பிரிவில் "ஆக்ரா" அறிமுகமாக இருக்கிறது. இதில், ஆஷிகி புகழ் ராகுல் ராய் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். பிரியங்கா போஸ், விபா சிப்பர், சோனல் ஜா, ஆஞ்சல் கோஸ்வாமி, ருஹானி ஷர்மா மற்றும் அறிமுக நடிகர் மோஹித் அகர்வால் ஆகியோரும் உள்ளனர். திரைப்படத் தயாரிப்பாளர் அரிபம் சியாம் ஷர்மாவின் திரைப்படம் "இஷானோ" கிளாசிக் பிரிவின் கீழ் திரையிடப்படுகிறது. இஷானோ என்ற திரைப்படம், இந்திய தேசிய திரைப்படக் காப்பகத்தால் (NFIA) பாதுகாக்கப்பட்டு, சமீபத்தில் மணிப்பூர் மாநில திரைப்பட மேம்பாட்டு சங்கத்தால் மீட்டெடுக்கப்பட்டது. கேன்ஸ் விழாவில் இஷானோ இரண்டாம் முறையாக திரையிடப்படுகிறது. இந்தப் படம் இதற்கு முன்பு 1991 ஆம் ஆண்டு Un Certain Regard பிரிவின் கீழ் காட்சிப்படுத்தப்பட்டது.