
வீடியோ: இம்ரான் கான் எப்படி கைது செய்யப்பட்டார்
செய்தி முன்னோட்டம்
பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான், ஊழல் வழக்கு விசாரணைக்காக இன்று(மே 9) இஸ்லாமாபாத் உயர்நீதிமன்றத்திற்கு சென்றிருந்த போது பாராமிலிரே ரேஞ்சர்களால் கைது செய்யப்பட்டார்.
கலவரத்தை கட்டுப்படுத்தும் வீரர்கள் அவரை வேனில் ஏற்றிச் செல்வது போன்ற காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி உள்ளது.
அல்-காதர் அறக்கட்டளை வழக்கில் இம்ரான் கான் கைது செய்யப்பட்டுள்ளதாக இஸ்லாமாபாத் காவல்துறை தெரிவித்துள்ளது.
இம்ரான் கான் இஸ்லாமாபாத் உயர் நீதிமன்ற வாயிலுக்குள் நுழைந்த சிறிது நேரத்திலேயே, துணை ராணுவப் படைகளும், ஆயுதம் ஏந்திய பணியாளர்களும் நீதிமன்றத்திற்குள் நுழைந்தனர் என்று கூறப்படுகிறது.
கடந்த ஆண்டு ஏப்ரலில் நம்பிக்கை வாக்கெடுப்பு மூலம் இம்ரான் கான் வெளியேற்றப்பட்டதில் இருந்து பல வழக்குகளை அவர் எதிர்கொண்டு வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
ட்விட்டர் அஞ்சல்
இம்ரான் கான் கைதான போது பதிவுசெய்யப்பட்ட வீடியோ
Former Prime Minister of Pakistan Imran Khan has been arrested in Islamabad. pic.twitter.com/INyGQxoxa4
— RT (@RT_com) May 9, 2023