Page Loader
கங்காருக்கள் பட்டினியால் இறப்பதற்கு முன் அவற்றை அழிக்க வேண்டும்: ஆஸ்திரேலிய அதிகாரிகள் 
கங்காருகள், மிக வேகமாக வயல்வெளிகளை சூறையாட கூடியது.

கங்காருக்கள் பட்டினியால் இறப்பதற்கு முன் அவற்றை அழிக்க வேண்டும்: ஆஸ்திரேலிய அதிகாரிகள் 

எழுதியவர் Sindhuja SM
May 10, 2023
04:19 pm

செய்தி முன்னோட்டம்

ஆஸ்திரேலியாவில் கங்காருக்களின் எண்ணிக்கை கட்டுப்படுத்தப்படவில்லை என்றால், கங்காருக்கள் பேரழிவை சந்திக்கக்கூடும் என்று சூழலியலாளர்கள் எச்சரித்துள்ளனர். வெளிநாட்டவர்கள் கங்காருவை ஆஸ்திரேலியாவின் அடையாளமாக கருதினாலும், அந்நாட்டிற்குள் கங்காரு என்பது பெரிய சுற்றுச்சூழல் தலைவலியாகவே பார்க்கப்படுகிறது. கங்காரு, மிக வேகமாகவும் மிக அதிகமாகவும் இனப்பெருக்கம் செய்யக்கூடிய ஒரு இனமாகும். மழை காலத்தில் தீவனம் ஏராளமாக கிடைக்கும் போது, ​​அவற்றின் எண்ணிக்கை கோடிக்கணக்கில் அதிகரிக்கும் தன்மையை கொண்டது. கங்காருகள், மிக வேகமாக வயல்வெளிகளை சூறையாட கூடியது. அதே நேரம், உணவு தீர்ந்துவிட்டால் அவை கூட்டம் கூட்டமாக பட்டினியால் இறந்துவிடும் என்று சூழலியல் நிபுணர் கேத்தரின் மோஸ்பி எச்சரித்துள்ளார். "கடந்த முறை வறட்சி ஏற்பட்டபோது, சில பகுதிகளில் 80-90% கங்காருக்கள் இறந்துவிட்டதாக மதிப்பிடபட்டது," என்று அவர் கூறியுள்ளார்.

details

 பட்டினியால் கழிப்பறை காகிதங்களை உண்டு வாழும் கங்காருக்கள்

"அவை பட்டினியால் உயிரிழக்கின்றனர். பொது கழிப்பறைகளுக்குச் சென்று கழிப்பறை காகிதங்களை சாப்பிடுகின்றன. அல்லது பசியுடன் சாலையில் படுத்துக் கொள்கின்றன" என்று அவர் மேலும் கூறியிருக்கிறார். கங்காருக்களின் எண்ணிக்கையை கட்டுப்பாட்டில் வைத்திருப்பதற்கு, அவைகளை சுட்டு கொன்று விட்டு, இறைச்சிகளை நாம் எடுத்துக்கொள்ளலாம் என்றும் அவர் கூறியுள்ளார். "இது அவற்றின் எண்ணிக்கையை குறைக்கிறது. நாம் அவற்றை ஒரு வளமாகப் பார்த்து, அவற்றை அதன்படி நிர்வகிக்க வேண்டும். அப்படி செய்தால் நாம் காணும் பேரழிவு மரணங்களை தடுக்கலாம்." என்று கேத்தரின் மோஸ்பி மேலும் தெரிவித்துள்ளார். கங்காருக்கள் ஆஸ்திரேலியாவில் பாதுகாக்கப்படுகின்றன. ஆனால் மிகவும் பொதுவான இனங்கள் அழிந்துபோகும் இனமாக கருதப்படுவதில்லை. எனவே, ஆஸ்திரேலியாவில் பெரும்பாலான அதிகார வரம்புகளுக்குள் அவைகளை சுட்டுக் கொல்வதற்கு அனுமதி இருக்கிறது.