
லண்டன்: உச்சத்தை தொட்ட வீட்டு வாடகையால் மக்கள் அவதி
செய்தி முன்னோட்டம்
லண்டனின் வீட்டு வாடைகள் உச்சத்தை தொட்டிருப்பதால், சராசரி வருமானம் வாங்குபவர்கள் இரட்டிப்பாக சம்பளம் வாங்கினால் மட்டுமே அவர்களுக்கு வீடு கிடைக்கும் நிலைமை ஏற்பட்டுள்ளது.
'ப்ளூம்பெர்க்' என்னும் செய்தி நிறுவனத்திற்காக 'ஹம்ப்டன்ஸ் இன்டர்நேஷனல் எஸ்டேட் ஏஜென்ட்கள்' செய்த பகுப்பாய்வில் இந்த தகவல்கள் வெளியாகி உள்ளதுன.
கடந்த வருடம் மே மாதத்தில் 2,234 பவுண்டுகளாக இருந்த வீட்டு வாடைகள், இந்த வருடம் மே மாதத்திற்குள் 13% சதவீதம் அதிகரித்துள்ளதாக இந்த பகுப்பாய்வு கூறுகிறது.
இதனால், பிரிட்டனின் லண்டனில் சராசரி வருமானம் வாங்கும் பெண்கள் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளதாக அறிஞர்கள் கூறுகின்றனர்.
ஜேஸ
"வருமானத்தின் பெரும்பகுதி வாடகையிலேயே போய்விடுகிறது": அனீஷா பெவரிட்ஜ்
ஒருவர் வாங்கும் சம்பளத்துடன் ஒப்பிடுகையில் அவரது வீட்டு வாடகை 30% சதவீதம் அல்லது அதற்கும் கீழ் இருந்தால் அது மலிவான விலை என்று ONS அறிக்கை கூறுகிறது.
"அதிகரிக்கும் வாடகைகளாலும் ஊதிய உயர்வுகள் இல்லாததாலும் இரு பாலினருக்கும் அவர்களின் வருமானத்தின் பெரும்பகுதி வாடகையிலேயே போய்விடுகிறது" என்று ஹம்ப்டன்ஸின் ஆராய்ச்சித் தலைவர் அனீஷா பெவரிட்ஜ் கூறியுள்ளார்.
லண்டனின் வாடகைச் சந்தையில் ஏற்பட்டிருக்கும் பெரும் நெருக்கடியை இந்த புள்ளிவிவரங்கள் அடிக்கோடிட்டுக் காட்டுகின்றன.
அதேபோன்று, வாடகை வீட்டில் இருப்பவர்கள் மத்தியில் பரவி வரும் கவலையை அரசாங்கம் கணக்கிட வேண்டிய கட்டாயத்தில் உள்ளது என்றும் இந்த அறிக்கை தெரிவித்திருக்கிறது.