
புதிய சுற்றுப் பணிநீக்கத்தில், 276 ஊழியர்களைப் பணிநீக்கம் செய்த மைக்ரோஃசாப்ட்
செய்தி முன்னோட்டம்
மைக்ரோசாஃப்ட் நிறுவனம், கடந்த ஜனவரி மாதம் தங்கள் நிறுவனத்திலிருந்து 10,000 ஊழியர்களைப் பணிநீக்கம் செய்யவிருப்பதாக அறிவித்தது. அதனைத் தொடர்ந்து கடந்த மே மாதம் வரை ஒவ்வொரு கட்டமாக பல ஆயிரம் ஊழியர்களைப் பணிநீக்கம் செய்து வந்தது அந்நிறுவனம்.
கடந்த ஜூன் 1-ம் தேதி முதல், மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் புதிய நிதியாண்டு துவங்கியிருக்கிறது. ஆனால், மீண்டும் தற்போது புதிய சுற்றில் பலநூறு ஊழியர்களை அந்நிறுவனம் பணிநீக்கம் செய்திருப்பதாகத் தகவல் வெளியாகியிருக்கிறது.
தற்போது பணிநீக்கம் செய்யப்பட்ட அந்நிறுவனத்தின் முன்னாள் ஊழியர்கள் பலர் லிங்க்டுஇன் தளத்தில் தாங்கள் மைக்ரசாஃப்டில் இருந்து பணிநீக்கம் செய்யப்பட்டதாகப் பதிவிட்டு வருகின்றனர்.
மைக்ரோசாஃப்ட்
புதிய சுற்று பணிநீக்கத்துடன் மைக்ரோஃசாப்ட்:
தற்போது புதிதாக 276 ஊழியர்களைப் பணிநீக்கம் செய்திருக்கிறது மைக்ரோசாஃப்ட். இதில் 66 பேர் இணையவழியில் வேலை பார்த்து வந்தவர்கள். இந்தப் புதிய சுற்று பணிநீக்கத்தில், அந்நிறுவனத்தின் வாடிக்கையாளர் சேவை மற்றும் விற்பனைப் பிரிவைச் சேர்ந்த ஊழியர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டிருக்கிறார்கள்.
தங்கள் நிறுவனத்திலிருந்து ஊழியர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டிருப்பதை செய்தி நிறுவனம் ஒன்றிடமும் உறுதி செய்திருக்கிறது மைக்ரோசாஃப்ட்.
நிறுவனத்தை மறுவடிவமைப்பு செய்வதன் ஒரு பகுதியாக இந்த ஊழியர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டிருப்பதாகத் தெரிவித்திருக்கிறது மைக்ரோசாப்ஃட் நிறுவனம்.
இத்துடன், இந்த 2023-ம் ஆண்டு மட்டும் உலகம் முழுவதும் உள்ள 839 தொழில்நுட்ப நிறுவனங்கள் தங்களது நிறுவனத்திலிருந்து 2.16 ஊழியர்களைப் பணிநீக்கம் செய்திருப்பது குறிப்பிடத்தக்கது.