Page Loader
அமெரிக்க H1-B விசா வைத்திருப்பவர்கள் இனி கனடாவிலும் வேலை செய்யலாம் 
விண்ணப்பதாரர்கள் மூன்று ஆண்டுகள் வரை திறந்த பணி அனுமதியைப் பெறுவார்கள்.

அமெரிக்க H1-B விசா வைத்திருப்பவர்கள் இனி கனடாவிலும் வேலை செய்யலாம் 

எழுதியவர் Sindhuja SM
Jun 28, 2023
11:00 am

செய்தி முன்னோட்டம்

அமெரிக்காவின் H-1B விசா வைத்திருக்கும் 10,000 பேருக்கு கனடாவில் பணிபுரிய அனுமதி வழங்கப்படும் என்று கனடாவின் குடிவரவு அமைச்சர் சீன் ஃப்ரேசர் அறிவித்துள்ளார். இதற்காக திறந்த பணி அனுமதி ஸ்ட்ரீமை கனட அரசாங்கம் உருவாக்க இருக்கிறது. இதன் மூலம், H-1B விசா வைத்திருப்பவர்களின் குடும்ப உறுப்பினர்களுக்கும் கனடாவில் படிப்பதற்கு/ வேலை செய்வதற்கு அனுமதி அளிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த புதிய திட்டத்தின் மூலம், விண்ணப்பதாரர்கள் மூன்று ஆண்டுகள் வரை திறந்த பணி அனுமதியைப் பெறுவார்கள். தொழில்நுட்ப நிறுவனங்களில் பணிபுரிய கனடாவுக்கு வரக்கூடிய உலகின் மிகவும் திறமையான நபர்களுக்கான இந்த குடியேற்றத் திட்டத்தை இந்த ஆண்டின் இறுதிக்குள் கனட அரசு உருவாக்கும் என்று ஃப்ரேசர் தெரிவித்துள்ளார்.

சி ஸ்ட் 

அவர்களால் கனடாவில் உள்ள எந்த நிறுவனத்திலும் வேலை செய்ய முடியும்

கனடாவின் குடிவரவு, அகதிகள் மற்றும் குடியுரிமை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் கூறி இருப்பதாவது: "கனடாவிலும் அமெரிக்காவிலும் உள்ள பெரிய நிறுவனங்களில் உயர்-தொழில்நுட்பத் துறைகளில் ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் பணிபுரிகின்றனர். அமெரிக்காவில் பணிபுரிபவர்கள் பெரும்பாலும் H-1B சிறப்பு ஆக்கிரமிப்பு விசாவை வைத்துள்ளனர். ஜூலை 16, 2023 நிலவரப்படி, அமெரிக்க H-1B சிறப்பு தொழில் விசா வைத்திருப்பவர்களும் அவர்களுடைய குடும்ப உறுப்பினர்களும் கனடாவுக்கு வர விண்ணப்பிக்க தகுதியுடையவர்கள். அவர்களால் கனடாவில் உள்ள எந்த நிறுவனத்திலும் வேலை செய்ய முடியும். அவர்களது வாழ்க்கைத் துணைவர்கள் மற்றும் அவர்களை சார்ந்திருப்பவர்கள் வேலை செய்வதற்கு/படிப்பதற்கு அனுமதி கோரி தற்காலிக ரெசிடெண்ட் விசாவிற்கு விண்ணப்பிக்க தகுதியுடையவர்கள்." ஆனால், யார் தகுதி பெறுவார்கள், எத்தனை பேர் அனுமதிக்கப்படுவார்கள் என்பதை குடிவரவு அமைச்சர் சரியாக விளக்கவில்லை.