தன்பாலின ஈர்ப்பாளர்கள் கொலை செய்யப்படுவதை வெளிப்படுத்திய பெண் பத்திரிகையாளர் மீது தாக்குதல்
செய்தி முன்னோட்டம்
ரஷ்யாவின் தெற்குப் பகுதியான செச்சினியாவில் தன்பாலின ஈர்ப்பாளர்கள் சித்திரவதை செய்யப்பட்டு, கொலை செய்யப்படுவதை வெளிப்படுத்திய 'நோவாயா கெஸட்டா' செய்தி நிறுவனத்தின் பத்திரிகையாளர் எலெனா மிலாஷினா நேற்று(ஜூலை 4) முகமூடி அணிந்த நபர்களால் தாக்கப்பட்டார்.
போனை திறப்பதற்கான பாஸ்வேர்டை கொடுக்கவில்லை என்றால் விரல்களை வெட்டி விடுவோம் என்று தாக்கியவர்கள் அவரை மிரட்டியுள்ளனர்.
எலெனா மிலாஷினாவும் அவரது வழக்கறிஞர் அலெக்சாண்டர் நெமோவ்வும் செச்சினியாவின் க்ரோஸ்னியில் மனித உரிமை ஆர்வலர் ஒருவரின் வழக்கு விசாரணையில் கலந்துகொள்ளச் சென்றிருந்தபோது தாக்கப்பட்டனர்.
இந்த தாக்குதலால், எலெனாவுக்கு மூளையதிர்ச்சி ஏற்பட்டது. தாக்குதல்காரர்கள் அவரது விரலை உடைத்து, அவருக்கு மொட்டை அடித்திருந்தனர்.
இதனால், எலெனா அடிக்கடி சுயநினைவை இழந்தார். தாக்குதல்காரர்கள் அவரது முகத்தில் பச்சை பெயிண்ட்டையும் பூசி அவரை அவமானப்படுத்த முயற்சித்திருந்தனர்.
டஞ்சாபி
2020ஆம் ஆண்டிலும் எலெனாவுக்கு எதிராக தாக்குதல் நடத்தப்பட்டிருக்கிறது
"அவர்கள் டிரைவரை காரிலிருந்து வெளியே தூக்கி எறிந்துவிட்டு. காருக்குள் ஏறி, என் கைகளைக் கட்டி போட்டுவிட்டு, என்னை முட்டி போட வைத்து, என் தலையில் துப்பாக்கியை வைத்தனர்." என்று எலெனா வாக்குமூலம் அளித்துள்ளார்.
இதற்கு முன், எலெனா மிலாஷினாவை "பயங்கரவாதி" என்று முத்திரை குத்திய செச்சினியா தலைவர் ரம்ஜான் கதிரோவ், பிராந்திய அதிகாரிகள் விசாரணையைத் தொடங்கியுள்ளனர் என்றும், தாக்குதல் நடத்தியவர்களைக் கண்டுபிடிப்பார்கள் என்றும் கூறியுள்ளார்.
எலெனாவுக்கு எதிராக பல மனித உரிமை மீறல்களும் அச்சுறுத்தல்களும் தாக்குதல்களும் இதற்குமுன் நடத்தப்பட்டிருக்கிறது.
2020ஆம் ஆண்டில், எலெனாவும் அவருடன் சென்ற ஒரு வழக்கறிஞரும் ஒரு கும்பலால் தாக்கப்பட்டனர்.
கடந்த ஆண்டு, செச்சென் அதிகாரிகளால் அச்சுறுத்தப்பட்டதால், எலெனா தற்காலிகமாக ரஷ்யாவை விட்டு வெளியேறினார்.