தன்பால் ஈர்ப்பாளர்கள்: செய்தி
ஒரே பாலின தம்பதிகளின் உறவை அங்கீகரிக்க 'குடும்ப பத்திரம்': சென்னை உயர் நீதிமன்றம் வலியுறுத்தல்
ஒரே பாலின தம்பதிகளின் உரிமைகளை அங்கீகரிக்கவும், சமூகத்தில் அத்தகைய உறவுகளில் உள்ளவர்களின் நிலையை மேம்படுத்தவும், "குடும்ப கூட்டணி பத்திரத்தை" சட்டப்பூர்வ ஆவணமாக ஏற்குமாறு தமிழக அரசிடம் சென்னை உயர் நீதிமன்றம் நேற்று வலியுறுத்தியது.
ஒரே பாலின திருமண வழக்கில் உச்ச நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து மறுஆய்வு மனு தாக்கல்
ஒரே பாலின திருமணங்களுக்கு சட்ட அங்கீகாரம் வழங்க உச்ச நீதிமன்றம் மறுத்ததை எதிர்த்து இன்று மறுஆய்வு மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
'எனது கருத்தில் மாற்றம் இல்லை': ஒரே பாலின திருமண தீர்ப்பு குறித்து பேசிய இந்திய தலைமை நீதிபதி
ஒரே பாலின திருமணத்திற்கு ஆதரவாக தீர்ப்பு வழங்கிய இந்திய தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட், தனது கருத்தில் எந்த மாற்றமும் இல்லை என்று தெரிவித்துள்ளார்.
ஒரே பாலின தம்பதிகளின் நடைமுறை பிரச்சனைகளை தீர்க்க அறிவுறுத்தியது உச்ச நீதிமன்றம்
ரேஷன் கார்டு, ஓய்வூதியம் மற்றும் வாரிசு பிரச்சினைகள் போன்ற ஒரே பாலின தம்பதிகளின் நடைமுறைக் கவலைகளைத் தீர்ப்பதற்கு ஒரு குழுவை அமைக்குமாறு மத்திய அரசை உச்ச நீதிமன்றம் கேட்டு கொண்டுள்ளது.
ஒரே பாலின திருமணத்தை அங்கீகரிக்க மறுத்தது உச்ச நீதிமன்றம்
ஒரே பாலின தம்பதிகளுக்கு சட்டபூர்வ அங்கீகாரம் வழங்குவது தொடர்பான பிரச்சனை குறித்து உச்ச நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்கியுள்ளது.
ஒரே பாலின முத்தம்: பெரும் இசை விழாவை நிறுத்தியது மலேசியா
மலேசியாவின் LGBTQ-எதிர்ப்பு சட்டங்களை கண்டித்து, 'தி 1975' என்ற இசைக்குழுவை சேர்ந்த பாடகர் தனது ஆண் நண்பருக்கு முத்தம் கொடுத்ததை அடுத்து, மலேசிய அதிகாரிகள் சனிக்கிழமையன்று ஒரு மாபெரும் இசை விழாவை ரத்து செய்தனர்.
சுயமரியாதை மாதம்: LGBTQIA+ சமூகத்திற்கு காங்கிரஸ் ஆதரவு
பால் புதுமையினரின் சுயமரியாதை மாதம் தொடங்கியுள்ள நிலையில், காங்கிரஸ் கட்சி LGBTQIA+ சமூகத்திற்கு ஆதரவாக ட்விட்டரில் பதிவிட்டிருக்கிறது.
ஒரே பாலின தம்பதிகளுக்கு தத்தெடுக்கும் உரிமையை வழங்கியது தைவான்
ஒரே பாலின தம்பதிகள் இணைந்து குழந்தைகளை தத்தெடுக்க அனுமதிக்கும் சட்ட திருத்தத்தை தைவான் பாராளுமன்றம் இன்று(மே 16) நிறைவேற்றியது.
ஒரே பாலின திருமணங்கள்: தீர்ப்பை ஒத்திவைத்தது உச்ச நீதிமன்றம்
ஒரே பாலின திருமணத்தை சட்டப்பூர்வமாக அங்கீகரிக்க கோரி தொடரப்பட்ட மனுக்கள் மீதான தீர்ப்பை உச்ச நீதிமன்றம் இன்று(மே-11) ஒத்திவைத்தது.
ஒரே பாலின உறவுகள் குற்றமற்றது: இந்தியாவை முன்னுதாரணமாக எடுத்துக்கொண்ட இலங்கை
ஒரே பாலின உறவுகளை குற்றமற்றதாக மாற்றும் சட்டமூலத்திற்கு இலங்கை உச்ச நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.
ஒரே பாலின தம்பதிகள் குழந்தையை தத்தெடுக்க சட்டம் அனுமதிக்கிறது: தலைமை நீதிபதி
ஒரு தனிநபர் குழந்தையைத் தத்தெடுக்க இந்தியாவின் சட்டங்கள் அனுமதிக்கின்றன என்று உச்ச நீதிமன்றம் இன்று(மே 10) தெரிவித்துள்ளது.
ஒரே பாலின திருமணங்களுக்கு ராஜஸ்தான் எதிர்ப்பு தெரிவித்துள்ளது: மத்திய அரசு
ஒரே பாலின திருமண விவகாரம் தொடர்பாக ஏழு மாநிலங்களில் இருந்து பதில் கிடைத்துள்ளதாக உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு இன்று(மே 10) தெரிவித்துள்ளது.
திருமணம் செய்துகொள்ள அனைவருக்கும் அடிப்படை உரிமை உள்ளதா: ஒரே பாலின திருமண விவாதம்
ஒரே பாலின திருமணங்களுக்கான மனுக்களை விசாரித்த உச்சநீதிமன்றம் இன்று(மே 9), திருமணம் செய்துகொள்ள அடிப்படை உரிமை உள்ளதா, இல்லையா என்று கேள்வி எழுப்பியது.
LGBTQIA+ சமூகப் பிரச்சனைகளை தீர்ப்பதற்கான குழு நிச்சயமாக அமைக்கப்படும்: மத்திய அரசு
LGBTQIA+ சமூகத்தின் "உண்மையான மனிதக் கவலைகள்" குறித்து ஆராய ஒரு குழு அமைக்கப்படும் என்று உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு இன்று(மே 3) தெரிவித்துள்ளது.
திருமண சமத்துவம்: இந்த இக்கட்டான நிலையை உச்சநீதிமன்றத்தால் தீர்க்க முடியுமா?
ஒரே பாலின திருமணங்களுக்கு ஆதரவாகவும் எதிராகவும் வாதிடும் மனுக்களை இந்திய உச்ச நீதிமன்றம் தற்போது விசாரித்து வருகிறது.
ஒரே பாலின தம்பதிகள் சமூக உரிமைகளை எவ்வாறு பெறுவார்கள்: மத்திய அரசிடம் உச்சநீதிமன்றம் கேள்வி
ஒரே பாலின திருமணங்களை ஏற்று கொள்ள முடியாது என்றால், ஒரே பாலின தம்பதிகளுக்கு அடிப்படை சமூக உரிமைகளை வழங்குவதற்கான வழியை அரசாங்கம் கண்டுபிடிக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் இன்று(ஏப் 27) மத்திய அரசிடம் கூறியது.
ஒரே பாலின திருமணங்கள்: இன்று உச்ச நீதிமன்றத்தில் என்ன விவாதிக்கப்பட்டது
ஒரே பாலின திருமணங்கள் மற்றும் திருமணச் சமத்துவம் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை இன்று(ஏப் 26) 5வது நாளாக உச்ச நீதிமன்றம் விசாரித்தது.
ஒரே பாலின உறவுகள் உடல் ரீதியானது மட்டுமல்ல: தலைமை நீதிபதி
இந்தியாவில் ஒரே பாலின திருமணங்களுக்கு சட்ட அங்கீகாரம் வழங்குவது தொடர்பான விசாரணைகள் இன்றும்(ஏப் 20) உச்ச நீதிமன்றத்தில் தொடர்ந்து நடைபெற்றது. ஒரே பாலின திருமணங்கள் குறித்து நடைபெறும் மூன்றாவது நாள் விசாரணை இதுவாகும்.
ஒரே பாலின திருமணங்கள்: 2வது நாள் விசாரணையில் என்ன விவாதிக்கப்பட்டது
இந்தியாவில் ஒரே பாலின திருமணங்களுக்கு சட்ட அங்கீகாரம் வழங்குவது தொடர்பான விசாரணைகள் இன்றும்(ஏப் 19) உச்ச நீதிமன்றத்தில் தொடர்ந்து நடைபெற்றது.
ஒரே பாலின திருமணங்கள் பற்றி மாநிலங்கள் என்ன நினைக்கிறது: மத்திய அரசு கேள்வி
இந்தியாவில் ஒரே பாலின திருமணங்களுக்கு சட்ட அங்கீகாரம் வழங்குவது தொடர்பான இறுதி வாதங்களை உச்ச நீதிமன்றம் விசாரித்து வரும் நிலையில், இது குறித்து மாநிலங்கள் தங்களது கருத்துக்களை சமர்ப்பிக்க வேண்டும் என்று மத்திய அரசு கேட்டு கொண்டுள்ளது.
திருமணம் மறுக்கப்படுவது குடியுரிமை மறுக்கப்படுவதற்கு சமம்: ஒரே பாலின திருமணங்களுக்கான இறுதி வாதம்
இந்தியாவில் ஒரே பாலின திருமணங்களுக்கு சட்ட அங்கீகாரம் வழங்குவது தொடர்பான இறுதி வாதங்களை ஐந்து உச்சநீதிமன்ற நீதிபதிகளை கொண்ட அரசியல் சாசன அமர்வு இன்று(ஏப் 18) விசாரித்தது.
அங்கீகரிக்கப்படுமா ஒரே பாலின திருமணங்கள்: ஏன் இந்த போராட்டம்
இந்தியாவில் ஒரே பாலின திருமணங்களுக்கு சட்ட அங்கீகாரம் வழங்குவது தொடர்பான இறுதி வாதங்களை ஐந்து நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு நாளை(ஏப் 18) உச்ச நீதிமன்றத்தில் விசாரிக்க உள்ளது.
ஒரே பாலின திருமணங்கள்: குழந்தை உரிமைகள் ஆணையம் எதிர்ப்பு
இந்தியாவில் ஒரே பாலின தம்பதிகளுக்கு தத்தெடுக்கும் உரிமைகளை வழங்க கோரிய மனுக்களுக்கு தேசிய குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையம்(NCPCR) எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
#LoveIsLove: LGBTQ சமூகத்தை பற்றி தெளிவுபடுத்தப்படவேண்டிய சில தவறான எண்ணங்கள்
பல காலமாய் சமூகத்தால் ஒடுக்கப்பட்டு, இழிவாக பார்க்கப்பட்ட LGBTQ சமூகம், தற்போது தான், தங்களுக்குரிய அங்கீகாரத்தை பெற்றுள்ளது. எனினும், இவர்களைப் பற்றி சில கட்டுக்கதைகள் நிலவி வருகிறது. இந்த காதலர் தினத்தில், அவர்களைப் பற்றிய கட்டுக்கதைகளை நீக்கி, அவர்களின் காதலை புரிந்து கொள்ள முயற்சிக்கலாம் .